Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என் மனைவியின் முகத்தை பார்க்க பிடிக்கும்! 90 மணி நேர வேலை! எல்&டி தலைவருக்கு ஆனந்த் மஹிந்திரா பதிலடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வீட்டில் எவ்வளவு நேரம் மனைவியின் முகத்தைப் பார்த்துக் கொண்டு இருப்பீர்கள்.. வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று எல் & டி நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியன் கூறிய கருத்துகள் பேசுபொருளாகியுள்ளது. இதற்கிடையே பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா இந்த கருத்துக்குக் கிண்டல் செய்யும் வகையில் பதிலளித்துள்ளார். இது குறித்து நாம் பார்க்கலாம்.

நமது நாட்டில் வேலை செய்யும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கருத்தை இப்போது சில பெருநிறுவனங்களின் முதலாளிகள் கூறி வருகிறார்கள். இதை முதலில் ஆரம்பித்து வைத்தது இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி.

anand mahindra narayana murthy

90 மணி நேர வேலை:

வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று நாராயண மூர்த்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தார். அப்போதே அதற்குப் பலரும் பல வித எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எல் & டி நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியன், வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் எனச் சொல்லி அதிர வைத்தார்.

மேலும், "வீட்டிலேயே எத்தனை மணி நேரம் தான் இருப்பீர்கள்.. எவ்வளவு நேரம் தான் மனைவியைப் பார்த்துக்கொண்டே இருப்பீர்கள்.. அலுவலகத்திற்காக வேலை செய்யுங்கள்" என்பது போலப் பேசியிருந்தார். அவரது இந்த 90 மணி நேர வேலை கருத்து இணையத்தில் மிகப் பெரியளவில் டிரெண்டானது. அவரது இந்தக் கருத்துக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ஆனந்த் மஹிந்திரா:

இதற்கிடையே இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆனந்த் மஹிந்திரா சில கருத்துகளைக் கூறியுள்ளார். டெல்லியில் நடந்த விக்சித் பாரத் யங் லீடர் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆனந்த் மஹிந்திராவிடம் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அங்கு அவர் சொன்ன பதில் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

ஆனந்த் மஹிந்திரா கூறுகையில், "(இன்ஃபோசிஸ் நிறுவனர்) நாராயண மூர்த்தி உள்ளிட்டோர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. எனவே, நான் சொல்வதை யாரும் தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டாம். ஆனால் நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இப்போது இது (வேலை செய்யும் நேரத்தை அதிகரிப்பது) தொடர்பாகத் தவறான விவாதம் நடந்து கொண்டு இருக்கிறது.

தரமே முக்கியம்:

என்னைப் பொறுத்தவரை வேலை செய்யும் நேரத்தைக் காட்டிலும் வேலையின் தரமே முக்கியம். ஒருவர் 48, 40 மணிநேரம் வேலை செய்கிறாரா என்பது முக்கியம் இல்லை.. தரமான வேலை செய்கிறாரா என்பதே முக்கியம். 70 மணி நேரமா 90 மணி நேரமா என்பது பேச்சே இல்லை. ஒருவரின் அவுட்புட் எப்படி இருக்கிறது என்பதே முக்கியம்.. 10 மணி நேரம் மட்டும் வேலை செய்தும் ஒருவரால் சிறப்பான அவுட் புட்டை தர முடிகிறது என்றால்.. நாம் அந்த முறைக்குக் கூட மாறலாம்.

நீங்கள் வீட்டில் போதிய நேரத்தைச் செலவிடவில்லை என்றால்.. நீங்கள் புத்தகங்களைப் படிக்கவில்லை என்றால்.. நீங்கள் நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடவில்லை என்றால்.. உங்களுக்கு நீங்கள் சிந்திக்க நேரமில்லை என்றால், எப்படி உங்களால் சரியான முடிவுகளை எடுக்க முடியும். எப்படி முடிவுகளை எடுக்கத் தேவையான தகவல்கள் உங்களிடம் இருக்கும்.

பிஸ்னஸுக்கே உதவும்:

நான் நடத்தும் ஆட்டோமொபைல் பிஸ்னஸையே ஒரு உதாரணமாகச் சொல்கிறேன். நாங்கள் ஒரு காரை உருவாக்கும் போது, வாடிக்கையாளருக்கு காரில் என்ன வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடாமல்.. எப்போதும் அலுவலகத்திலேயே இருந்தால் மக்களுக்கு என்ன பிடிக்கும்.. ஒரு காரில் மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை எப்படி முடிவெடுப்பது" என்றார்.

தொடர்ந்து நீங்கள் ஒரு வாரத்திற்கு எத்தனை மணி நேரம் வேலை செய்கிறீர்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "இந்த கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.. முன்பே நான் குறிப்பிட்டதை போல நேரத்தை விட.. தரமே முக்கியம். என்னிடம் உங்கள் வேலை எவ்வளவு குவாலிட்டியாக இருக்கும் எனக் கேளுங்கள் பதில் சொல்கிறேன். ஆனால், எவ்வளவு நேரம் வேலை செய்கிறேன் எனக் கேட்காதீர்கள்" என்று பதிலளித்தார்.

மனைவியுடன் நேரத்தை செலவிடப் பிடிக்கும்:

ஆனந்த் மஹிந்திரா எப்போதும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருப்பார். இது குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும் போது தான் அவர் எல் & டி நிறுவனரின் கருத்துக்கும் பதிலடி கொடுக்கும் விதமாகத் தனது மனைவியைப் பார்த்துக் கொண்டே இருப்பதும், அவருடன் நேரத்தைச் செலவிடுவதும் பிடிக்கும் எனக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், "நான் எக்ஸ் தளத்தில் ஆக்டிவாக இருக்கிறேன். நான் ஏதோ தனிமையில் இருப்பதால் ஆக்டிவாக இருக்கிறேன் என நினைத்துக்கொள்ள வேண்டாம்.

எனது மனைவி அற்புதமான நபர்.. அவரை பார்த்துக் கொண்டே இருப்பதும்.. அவருடன் நேரத்தைச் செலவிடுவதும் எனக்குப் பிடிக்கும்.. நான் சமூக வலைத்தளங்களை ஒரு பிஸ்னஸ் டூலாகவே பயன்படுத்துகிறேன்.. இந்த ஒரே தளத்தில் இருந்து என்னால் 1 கோடிக்கும் அதிகமான மக்களின் கருத்துகளைப் பெற முடிகிறது" என்றார். எவ்வளவு நேரம் வேலை செய்கிறோம் என்பதை விட வேலையின் தரம் எப்படி இருக்கிறது என்பதே முக்கியம் என்ற தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் இந்த கருத்து இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+