பாஜகவின் முடிவு இங்கிருந்து துவங்கும்.. பொறுத்திருந்து பாருங்கள்.. என்சிபியின் நவாப் எச்சரிக்கை!
பாஜக கட்சியின் அரசியல் மகாராஷ்டிராவில் இருந்து முடிவிற்கு வரும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் பேட்டி அளித்துள்ளார்.
டெல்லி: பாஜக கட்சியின் அரசியல் மகாராஷ்டிராவில் இருந்து முடிவிற்கு வரும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் பேட்டி அளித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் நாளை மாலை சிவசேனா தலைமையில் புதிய கூட்டணி ஆட்சி அமைய இருக்கிறது. சிவசேனா உடன் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உள்ளது. நாளை காலை சிவசேனா பெரும்பான்மையை நிரூபிக்கும்.
சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அங்கு முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார். இன்று மாலைதான் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தன்னுடைய பதவியில் இருந்து விலகினார்.

என்ன பேட்டி
இந்த நிலையில் இது தொடர்பாக தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் பேட்டி அளித்துள்ளார். அதில், சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி கிடையாது. நாங்கள் நிலையான ஆட்சி தருவோம். இன்னும் பல வருடங்களுக்கு நாங்கள் ஆட்சி அமைப்போம்.

முடிவு துவக்கம்
பாஜகவின் முடிவு இங்கிருந்து துவங்குகிறது. மகாராஷ்டிராவில் இருந்து அவர்களின் முடிவு ஆரம்பிக்கிறது. பாஜகவை யாரும் வெல்ல முடியாது என்ற பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த பிம்பத்தை நாங்கள் அழித்து இருக்கிறோம். பாஜகவிற்கு திமிர் கூடிவிட்டது.

பின்வாங்கியது
உச்ச நீதிமன்ற தீர்ப்பை பார்த்து பாஜக பின்வாங்கி உள்ளது. அவர்களுக்கு பெரும்பான்மை இல்லை என்று நாங்கள் தொடக்கத்தில் இருந்து சொல்லி வந்தோம். உத்தவ் தாக்கரே நாளை முதல்வராக பொறுப்பேற்பார்.

மாநில அரசியல்
சிவசேனா மாநில அரசியல் செய்யும் கட்சி. அவர்கள் மகாராஷ்டிராவிற்கு சேவை செய்ய வேண்டும் என்று வந்து இருக்கிறார்கள். ஆனால் பாஜகவுடன் இணைந்தது அவர்கள் கெட்டு போனார்கள். தற்போது நல்லபடியாக மீண்டு விட்டனர், நவாப் மாலிக் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications