இது என்ன விளையாட்டா? மீண்டும் விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழிப்பு.. போதை ஆசாமியை தூக்கிய போலீஸ்
டெல்லி: அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் சக பயணி மீது போதை ஆசாமி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு, இதேபோல் சக பெண் பயணி மீது போதையில் இருந்த நபர் சிறுநீர் கழித்த சம்பவம் அரங்கேறியதை அடுத்து மீண்டும் இப்படியொரு சம்பவம் நடப்பது பொதுமக்கள் இடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற தவறுகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படாத வரை, இந்த அநாகரீகமான செயல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.

ஆரம்பித்து வைத்த சங்கர் மிஸ்ரா
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி 'ஏர் இந்தியா' விமானம் சென்று கொண்டிருந்தது. அதில் இந்தியாவைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்பவரும் பயணித்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து மது அருந்திக் கொண்டும், விமானத்தில் அங்கும் இங்கும் நடப்பதுமாக அந்தப் பயணி இருந்தார். மதிய உணவு முடிந்ததும், பயணிகள் இளைப்பாறுவதற்காக விமானத்தில் இருந்து மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. அப்போது, அசந்து தூங்கிக்கொண்டிருந்த சக பெண் பயணி ஒருவர் மீது அந்த போதை ஆசாமி சிறுநீர் கழித்தார். மேலும், அந்தப் பெண்ணின் முகத்திற்கு நேராக தனது ஆணுறுப்பை காட்டிக் கொண்டே இருந்தார். இதையடுத்து, மற்ற பயணிகள் அவரை திட்ட தொடங்கியதால் அங்கிருந்து அவர் நகர்ந்தார்.

அடுத்தடுத்து சம்பவங்கள்
எனினும், அவர் மீது விமான ஊழியர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர், ஊடகங்களில் இந்த விவகாரம் வெளியாகி பூதாகரமானதை அடுத்து சங்கர் மிஸ்ராவை போலீஸார் கைது செய்தனர். இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, விமானங்களில் சில பயணிகள் மோசமான செயலில் ஈடுபடுவது தொடர்கதையானது. விமானத்திற்குள் சண்டையிடுவது, விமான பெண் ஊழியருக்கு பாலியல் சீண்டல், விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறப்பது என விமானப் பயணம் என்றாலே பயப்படும் அளவுக்கான சம்பவங்கள் அரங்கேறி வந்தன.

திடீர் அலறல் சத்தம்
இந்த சூழலில், மீண்டும் ஒரு அருவருப்பான சம்பவம் விமானத்தில் நடந்துள்ளது. 'அமெரிக்கன் ஏர்லைன்ஸ்' விமானம் நியூயார்க் நகரில் இருந்து புறப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி வந்து கொண்டிருந்தது. அப்போது அதில் பயணித்த ஒரு பயணி விடிய விடிய மது அருந்திக் கொண்டும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் தேவையில்லாமல் பேசிக்கொண்டும் வந்துள்ளார். இதுதொடர்பாக சக பயணிகள் புகார் அளிக்கவே, விமான ஊழியர்கள் அவரை எச்சரித்தனர். இதனால் சிறிது நேரம் அவர் அமைதியாக வந்தார். இந்நிலையில், விமானத்தில் திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது.

மீண்டும் சிறுநீர்
இதனால் அதிர்ச்சியடைந்த சக பயணிகளும், விமான ஊழியர்களும் அங்கு வந்தனர். அப்போது அந்த போதை ஆசாமி தனக்கு அருகே அமர்ந்திருந்த சக ஆண் பயணி மீது சிறுநீர் கழித்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் விமான ஊழியர்கள் விசாரணை நடத்தினர். இதில், தான் தூங்கிக் கொண்டிருந்த போது சிறுநீர் கழித்துவிட்டதாகவும், தன்னை மன்னித்துவிடும்படியும் அவர் கேட்டுள்ளார். பின்னர், பாதிக்கப்பட்ட பயணியும் அவர் மீது புகார் அளிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்தார். எனினும், சனிக்கிழமை டெல்லி விமான நிலையத்திற்கு விமானம் வந்ததும், ஊழியர்கள் அவரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தற்போது அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படும். எனினும், அவர் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை.
-
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications