டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது தான் பிரதமராக கடைசி பேச்சு... மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி உருக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய மோடி, இது தான் பிரதமராக தனது கடைசி பேச்சு என்று உருக்கமாக தெரிவித்தார்.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலி மூலம் 'மன் கி பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அதன்படி, 53 வது 'மன்கிபாத்' வானொலி நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி பேசினார். அப்போது, நான் பிரதமராக மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசுவது இதுவே கடைசி முறை என்றார்.

போட்டியிடுவேன்

போட்டியிடுவேன்

அடுத்த இரண்டு மாதங்களில் தேர்தல் வர உள்ளதால், நாங்கள் தேர்தல் பணிகளில் பிஸியாக இருக்க வேண்டியது வரும். ஜனநாயகத்தின் மிகப்பெரும் திருவிழா தேர்தல் ஆகும். வரும் மக்களவை தேர்தலில் வேட்பாளராக நானும் போட்டியிடுவேன் என்றும் கூறினார்.

மோடி நம்பிக்கை

மோடி நம்பிக்கை

மேலும், அடுத்த மன் கி பாத் நிகழ்ச்சி மே மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமை நடக்க உள்ளது. அதாவது, கடந்த மூன்று மாதங்களில் நடந்த திட்டங்கள் மற்றும் யோசனைகள் குறித்து கலந்தாலோசிப்போம் என்றும் உங்களது ஆதரவால் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்த மன் கி பாத் நிகழ்ச்சி தொடரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

அனைவருக்கும் நன்றி

அனைவருக்கும் நன்றி

வாணொலி மூலம் ஒவ்வொரு மாதமும் பல லட்சம் குடும்பங்களுடன் கலந்துரையாடி உள்ளேன். உங்களது கடிதங்களை படித்துள்ளேன், தொலைப்பேசி வாயிலாக பேசியுள்ளோம். அப்போது எல்லாம் உங்கள் வீட்டில் ஒருவராக நினைத்து பேசிய அனுபவம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வான நன்றி என்றும் கூறினார்.

வலுவான நடவடிக்கை

வலுவான நடவடிக்கை

புல்வாமா தாக்குதலில் வீரர்களின் உயிர்த்தியாகத்தால் நாட்டுமக்கள் துயரமும் கோபமும் அடைந்துள்ளனர். வேறுபாடுகளை மறந்து தீவிரவாதத்திற்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை உறுதியாக வைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

English summary
Prime Minister Narendra Modi said that this 'Mann-Ki-Baat' radio broadcast is the last episode before the general elections
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X