Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருக்குறள் கூறும் பிரதமர் மோடி..திருவள்ளுவர் சிலையை பரிசளித்த உதயநிதி ஸ்டாலின்

திருக்குறளை மேற்கோள் காட்டி பேசும் பிரதமர் மோடிக்கு திருவள்ளுவர் சிலையை பரிசளித்துள்ளார் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திருக்குறள் மீது அலாதி பிரியம் கொண்டவர் பிரதமர் மோடி..தனது பேச்சில் அவ்வப்போது திருக்குறளை மேற்கோள் காட்டுவார். உதயநிதி ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த போது திருவள்ளுவர் சிலையை நினைவுப்பரிசாக வழங்கினார்.

திருக்குறளை முழுமையாக படித்து, உலகப்பொதுமறையாம் திருக்குறளில் வாழ்க்கைக்கு தேவைப்படும் அனைத்து கருத்துகளும் சொல்லப்பட்டிருப்பதால், திருக்குறளாலும் அதை இயற்றிய திருவள்ளுவராலும் பெரிதும் கவரப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, அவர் கலந்துகொள்ளும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில், தேவைப்படும் இடங்களில் திருக்குறளை மேற்கோள் காட்ட தவறியதே இல்லை.

 Minister Udhayanidhi stalin met with PM Narendramodi presented the statue of Thiruvalluvar

திருக்குறளில் திருவள்ளுவர் கூறிய கருத்துகளை படிக்க பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளைச் சேர்ந்தவர்களை பிரதமர் மோடி தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். கடந்த 2015ஆம் ஆண்டு குஜராத்தியில் குறளின் மொழிபெயர்ப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். தமிழகத்திற்கு வந்த சமயங்களில் எல்லாம் பிரதமர் மோடி திருக்குறளை மேற்கோள் காட்டியிருக்கிறார்.

டெல்லி செங்கோட்டையில் தனது சுதந்திர தின உரையில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நீர் நெருக்கடி மற்றும் நீரின் முக்கியத்துவத்தை பற்றி யாருமே அறிந்திராத காலத்தில், அதைப்பற்றி திருவள்ளுவர் திருக்குறளில் எழுதியிருக்கிறார். "நீரின்றி அமையாது உலகு" என்ற குறளை சொல்லி, அதன் விளக்கத்தையும் எடுத்துச்சொன்னார். அதாவது, நீர் மறைந்து போக ஆரம்பித்தால், இயற்கையின் செயல்முறைகள் சீர்குலைந்து இறுதியில் முடிவுக்கு வரும் என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டினார். வெளிநாடுகளிலும் திருவள்ளுவரின் சிறந்த கருத்துகளை பலமுறை நினைவுகூர்ந்திருக்கிறார் பிரதமர் மோடி.

ராணுவ வீரர்களுக்கு மத்தியில் பேசிய பிரதமர் மோடி, புனித திருவள்ளுவர் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வீரம், மரியாதை, கண்ணியமான நடத்தை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் பாரம்பரியம் அந்த நாட்டின் இராணுவத்தின் பிரதிபலிப்பாகும். இந்தியப் படைகள் எப்போதும் இந்த வழியைப் பின்பற்றி வருகின்றன என்றார்.

இளம் விஞ்ஞானிகளிடம் பேசும்போது, ​​பிரதமர் மோடி திருவள்ளுவரை மேற்கோள் காட்டி கற்றல் மற்றும் கடின உழைப்பு குறித்து ஒரு கருத்தைத் தெரிவித்தார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சிறந்த தமிழ் துறவியும் சமூக சீர்திருத்தவாதியுமான திருவள்ளுவர் ஜி வழங்கிய சூத்திரங்கள் அல்லது மந்திரங்கள் இன்றும் மிகவும் துல்லியமாகவும் பொருத்தமானதாகவும் உள்ளது என்று கூறினார்.

திருக்குறளை போற்றி திருவள்ளுவரின் புகழ் பரப்பும் பிரதமர் மோடி சென்னையில் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திருவள்ளுவர் சிலையை பரிசளித்தார்.

இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு நினைவுப்பரிசாக திருவள்ளுவர் சிலையை வழங்கினார். அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக டெல்லி சென்றுள்ள உதயநிதி ஸ்டாலின், மத்திய அமைச்சர்களையும், பிரதமரையும் சந்தித்து பேசியுள்ளது அவரது அடுத்த கட்ட நகர்வை பலருக்கும் உணர்த்தியுள்ளது.

மோடியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வு விலக்கு, விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பான கோரிக்கைகளை முன்வைத்தோம். அது தொடர்பாக அவர் சில விளக்கங்கள் கொடுத்தார். அதை கேட்டு நீட் விலக்குதான் தமிழ்நாட்டு மக்களின் நிலைபாடு. அதற்கான சட்டப்போராட்டத்தை தொடர்வோம் என்றும் கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+