நாடாளுமன்றத்தில் சலசலப்பு.. காங். எம்.பி.யின் சீட் அடியிலிருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!
டெல்லி: நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையின் அடியிலிருந்து ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ.25ம் தேதி தொடங்கியது. டிச.20 வரை 19 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் 18 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆனால் அதானி விவகாரம், உ.பி சம்பல் மசூதி சர்ச்சை என பல்வேறு விஷயங்களை விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கி வந்தன. இதற்கு அவை தலைவர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் இரண்டு அவைகளும் முடங்கியுள்ளன.

10வது நாளாக இன்றும் எதிர்க்கட்சிகள் அவையை முடக்கியுள்ளன. இன்று மக்களவை காலை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் கோரிக்கைகளை எழுப்பினர். ஆனால் அதற்கு விவாதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.
இப்படி இருக்கையில் மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையின் கீழ் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இது குறித்து அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார். அதாவது, “காங்கிரஸ் எம்பி அபிஷேக் சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை எண் 222-ன் அடியிலிருந்து கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அவர் தெலங்கானா மாநிலத்திலிருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று அறிவித்திருக்கிறார்.
அபிஷேங் சிங்வி கூறுகையில், “இதுபோன்று பணம் கண்கெடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதை நான் இப்போதுதான் முதல் முறையாக கேள்விப்படுகிறேன். நேற்று நான் வெறும் ஒற்றை 500 ரூபாய் தாளுடன் மதியம் 12.57 மணிக்கு அவைக்கு வந்திருந்தேன். மூன்று நிமிடங்களில் அவை முடக்கப்பட்டது. பின்னர் 1 மணிக்கு அங்கிருந்து வெளியே வந்து கேன்டீனில் அமர்ந்திருந்தேன். பின்னர் 1.30 மணிக்கு நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸும் வலியுறுத்தியுள்ளது. இந்த செயல் நாடாளுமன்றத்தின் மதிப்பை பாழாக்கும் செயல் என பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார். கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து நாடாளுமன்ற செயல்பாடுகளை முடக்கி வந்த நிலையில், தற்போது காங்கிரஸ் எம்பியின் இருக்கையிலிருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications