இந்தியாவில் நுழைந்த மங்கி பாக்ஸ்? எல்லா அறிகுறியும் அப்படியே இருக்கே.. ஹை அலர்ட் மோடில் அதிகாரிகள்
டெல்லி: உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு இப்போது இந்தியாவுக்குள் நுழைந்து இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து திரும்பிய ஒருவருக்கு மங்கி பாக்ஸ் அறிகுறிகள் இருக்கும் நிலையில், அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இப்போது இந்தியாவில் ஒருவருக்கு மங்கி பாக்ஸ் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய அந்த நபருக்கு மங்கி பாகஸ் வைரஸ் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருக்கும் நிலையில், அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டு இருந்த மங்கி பாக்ஸ் இப்போது இந்தியாவுக்குள் நுழைந்து இருக்கலாம். மங்கி பாக்ஸ் பரவல் ஏற்படும் போது அதைக் கையாள மத்திய அரசு ஏற்கனவே நெறிமுறைகளை வெளியிட்டு இருந்தது. அதன்படியே இந்த கேஸ் கையாளப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இப்போது அந்த நபர் வேறு யாருடன் எல்லாம் தொடர்பில் இருக்கிறார் என்பதைக் கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். ஏற்கனவே நாம் எதிர்பார்த்தபடி தான் இந்த கேஸ் இருப்பதால் தேவையற்ற கவலை தேவையில்லை என்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுபோல வெளிநாட்டுப் பயணங்களில் ஏற்படும் மங்கி பாக்ஸ் பாதிப்பைச் சமாளிக்க நாடு முழுமையாகத் தயாராக உள்ளது என்றும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு வழக்கமாக ஆப்பிரிக்காவுக்குள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த முறை உலகின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பை பொதுச் சுகாதார அவசரநிலையாக மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications