டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சு. சாமியின் மனுவை ஏற்க கூடாது.. அயோத்தி வழக்கில் இஸ்லாமிய அமைப்பு பிடிவாதம்.. தலைமை நீதிபதி கோபம்!

அயோத்தி வழக்கு தொடர்பாக இன்று நடந்த விசாரணையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமியின் மனு தொடர்பாக முக்கிய விவாதம் ஒன்று நடந்தது.

Google Oneindia Tamil News

டெல்லி: அயோத்தி வழக்கு தொடர்பாக இன்று நடந்த விசாரணையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமியின் மனு தொடர்பாக முக்கிய விவாதம் ஒன்று நடந்தது.

அயோத்தி வழக்கு வரும் ஆகஸ்ட் 6ம் தேதியில் இருந்து மீண்டும் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு தினமும் விசாரிக்கப்படும். வழக்கு விசாரணை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டது. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றனர். ஆனால் இந்த சமரச முயற்சி தோல்வி அடைந்துவிட்டதாக மூவர் குழு தெரிவித்துள்ளது.

மீண்டும் என்ன

மீண்டும் என்ன

இதனால் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இன்று நடந்த விசாரணையில் இஸ்லாமியா அமைப்பு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவான் முக்கியமான கோரிக்கைகள் சிலவற்றை வைத்தார். இவரின் கோரிக்கைகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

என்ன கோரிக்கை

என்ன கோரிக்கை

வழக்கறிஞர் ராஜீவ் தவான், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் வேகமாக முடிக்க நினைக்கிறது. ஆனால் அப்படி செய்ய கூடாது. வழக்கு விசாரணையை பொறுமையாக நடத்த வேண்டும். அனைத்து தரப்புகளையும் தீவிரமாக விசாரிக்க வேண்டும், என்று குறிப்பிட்டார். இதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி, வழக்கு தொடங்கிய பின் அதை பார்க்கலாம் என்று கூறினார்.

என்ன கோரிக்கை

என்ன கோரிக்கை

வழக்கறிஞர் ராஜீவ் தவான், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் வேகமாக முடிக்க நினைக்கிறது. ஆனால் அப்படி செய்ய கூடாது. வழக்கு விசாரணையை பொறுமையாக நடத்த வேண்டும். அனைத்து தரப்புகளையும் தீவிரமாக விசாரிக்க வேண்டும், என்று குறிப்பிட்டார். இதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி, வழக்கு தொடங்கிய பின் அதை பார்க்கலாம் என்று கூறினார்.

மீண்டும் அதுதான்

மீண்டும் அதுதான்

அதன்பின் மீண்டும் வாதாடிய வழக்கறிஞர் ராஜீவ் தவான், உச்ச நீதிமன்றம் மொத்தம் 14 மனுக்களை விசாரிக்க முடிவு செய்துள்ளது. அதில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியின் மனுவும் உள்ளது. அதை மட்டும் உச்ச நீதிமன்றம் ஏற்க கூடாது, என்றார். இதற்கு மீண்டும் பதில் அளித்த தலைமை நீதிபதி, வழக்கு தொடங்கிய பின் அதை பார்க்கலாம் என்று கூறினார்.

என்ன பொறுமை

என்ன பொறுமை

இதனால் பொறுமை இழந்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், தலைமை நீதிபதி அனைத்தையும் பிறகு பார்க்கலாம், வழக்கு தொடங்கிய பின் பார்க்கலாம் என்று கூற கூடாது. இப்போது ஏதாவது முடிவை அறிவிக்க வேண்டும் என்றார். மீண்டும் மீண்டும் அவர் அதை திருப்பி திருப்பி சொன்னார்.

என்ன கோபம்

என்ன கோபம்

இதற்கு கோபமாக பதில் அளித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வழக்கறிஞர் ராஜீவ் தவான் ஏன் வழக்கு தொடர்பாக வாதிடாமல் இருக்கிறார். அவர் நாங்கள் எடுக்கும் முடிவுகளை கேள்வி கேட்காமல், வழக்கு தொடர்பாக வாதிட்டால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.

English summary
Muslim body opposed Subramaniyan Swamy's petition in the Ayodhya land dispute case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X