எனது குடும்பம், சொத்து எல்லாமே நீங்கள் தான்.. ரேபரேலி வாக்காளர்களுக்கு சோனியா உருக்கமான கடிதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மக்களவைத் தேர்தலில் கடந்த முறை போலவே இம்முறையும் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது காங்கிரஸ். நாடு முழுவதுமுள்ள காங்கிரஸ் தொண்டர்கள் இதனால் சோர்வுறுள்ளனர். இந்நிலையில் தன்னை வெற்றி பெறச்செய்த ரேபரேலி தொகுதி வாக்காளர்களுக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட சோனியா, பாஜக வேட்பாளரை 1.67 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்று தொடர்ந்து 4-வது முறையாக மக்களவைக்குத் தோ்வாகியுள்ளார்.

My family and your property are you .. Sonias letter to Raebareli voters

இந்நிலையில் ரேபரேலி தொகுதி வாக்காளர்களுக்கு அவர் எழுதியுள்ள நன்றி கடிதத்தில், இதுவரை நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் என் மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெற வைத்ததை போலவே இம்முறையும் என்னை வெற்றி பெற செய்துள்ளீர்கள். அதற்காக எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் காங்கிரஸின் பாரம்பரிய தொகுதி என்பதாலும், தாம் போட்டியிட்டதாலும் எனக்கு எதிராக வேட்பாளர்கள் யாரையும் களமிறக்காத சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், சுவாபிமான் தளம் கட்சிகளுக்கும் இந்த நேரத்தில் நன்றிகளை கூற கடமைப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில் சோனியா காந்தி கூறியிருப்பதாவது: நாட்டின் நன்மதிப்பை பாதுகாக்க நான் பெற்ற எதையும் தியாகம் செய்ய தயாரக உள்ளேன் இந்த நிலைப்பாட்டிலிருந்து ஒருபோதும் பின்வாங்கமாட்டேன். இதை நான் உங்களுக்கு வாக்குறுதியாகவே அளிக்கிறேன் என கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர்களின் பாரம்பரியம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். எனது வாழ்க்கையானது உங்கள் எல்லோர் முன்பும் ஒரு திறந்த புத்தகமாகவே எப்போதும் இருந்து வருகிறது. எனது குடும்பம் நீங்கள் தான், எனது சொத்தும் நீங்கள் தான். எனக்கு தேவையான சக்தியை உங்களிடமிருந்து தான் நான் பெற்று வருகிறேன்.

தற்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளால், வரும் காலங்கள் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் சோதனையான காலகட்டம் என்பதை உணர்ந்துள்ளேன். ஆனால் இந்த சோதனைகளையெல்லாம் நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, அன்பு ஆகியவற்றின் மூலம் வென்று விட முடியும் என உறுதியாக நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+