Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பருத்தி இறக்குமதி வரியை மொத்தமாக ரத்து செய்த மத்திய அரசு.. திருப்பூர் ஜவுளித்துறையினருக்கு ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்காவின் 50% வரியால் இந்திய ஏற்றுமதியாளர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். குறிப்பாக திருப்பூர் ஜவுளித்துறை இதனால் மிக மோசமாகப் பாதிக்கப்படும் எனச் சொல்லப்பட்டது. இதை சமாளிக்க மத்திய அரசு பருத்தி இறக்குமதி வரியை ரத்து செய்ய ஜவுளித்துறையினர் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே இந்தக் கோரிக்கையை ஏற்று இன்று ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 30 வரை பருத்தி இறக்குமதி வரியை ரத்து செய்வதாக (India Suspends Cotton Import Duties) மத்திய அரசு அறிவித்துள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாகச் சொல்லி இந்தியாவுக்கு 50% வரியை அமெரிக்கா அறிவித்தது. அதாவது ரஷ்யா எண்ணெய்யை இந்தியா வாங்குவதாலேயே உக்ரைன் போர் தொடர்வதாகச் சொல்லி டிரம்ப் இந்த வரியை அறிவித்தார். அதில் 25% வரி ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது. மீதமுள்ள 25% வரி இம்மாத இறுதியில் அமலுக்கு வருகிறது.

cotton import duty wavier tiruppur textile industry Narendra Modi

அமெரிக்கா வரி

இந்தியாவுக்கு அமெரிக்கா முக்கிய மார்கெட்டாக இருக்கும் சூழலில், இந்தக் கூடுதல் வரி இந்திய ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் சிரமத்தைக் கொடுப்பதாகவே இருக்கிறது. கூடுதல் வரியால் இந்திய ஏற்றுமதியாளர்களால் மற்ற நாடுகளுடன் போட்டிப்போட முடியாத சூழல் ஏற்படுகிறது. இதில் குறிப்பாக ஜவுளித்துறை தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. வங்கதேசம் மற்றும் வியட்நாமுக்கு 20%, சீனாவுக்கு 30% என இருக்கும் நிலையில், இந்தியாவின் 50% வரி விகிதம் மிகவும் அதிகமாகும். வரி காரணமாக நமது ஏற்றுமதியாளர்களால் அவர்களுடன் போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டது.

கடும் பாதிப்பு

நமது திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதியில் ஜவுளித்துறையை நம்பியே அதிக மக்கள் இருக்கிறார்கள். டிரம்ப் வரியால் சுமார் 30-40% வரை இறக்குமதி பாதிக்கப்படும் எனச் சொல்லப்படுவதால் மக்கள் அஞ்சினர். இந்தப் பாதிப்பைச் சமாளிக்க மத்திய அரசு பருத்தி இறக்குமதி வரியை ரத்து செய்ய ஜவுளித்துறையினர் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று மத்திய அரசு இப்போது பருத்திக்கான இறக்குமதி வரியைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இது ஜவுளித் துறையினருக்கு மிகப் பெரிய நிவாரணமாகப் பார்க்கப்படுகிறது.

இறக்குமதி வரி ரத்து

இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு போன்ற தொழில் அமைப்புகள், பருத்தி இறக்குமதி வரியை நீக்குவதன் மூலம், போட்டித்தன்மையை ஓரளவுக்கு அதிகரிக்க முடியும் என்று அரசுக்கு வலியுறுத்தியிருந்தன. மத்திய அரசு பருத்தி இறக்குமதிக்கு 11% வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், அதை நீக்கினால் ஓரளவுக்குச் சமாளிக்கலாம் என்பதே இவர்களின் கோரிக்கையாக இருந்தது. அதைத் தான் இப்போது மத்திய அரசு ஏற்றுள்ளது.

இப்போது மத்திய அரசு செப்டம்பர் வரை மட்டுமே விலக்கு அளித்துள்ளனர். இருப்பினும், செப்டம்பருக்குப் பிறகும் கூட இறக்குமதிக்கு வரி விலக்கு தொடரும் என்றே தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர். அதிக வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்கச் சில இந்திய ஏற்றுமதியாளர்கள் வெளிநாடுகளில் உற்பத்தி செய்வதற்கான வழிகளை ஆராய்ந்து வருவதாகத் தகவல் வெளியாகி இருந்த நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது.

நரேந்திர மோடி அரசு

2030ஆம் ஆண்டுக்குள் ஜவுளி ஏற்றுமதியை $100 பில்லியனாக அதிகரிக்க மோடி அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. வரி பிரச்சினை தீர்ந்தாலே இந்தியா இந்த இலக்கை ஈஸியாக எட்டிவிடும். ஏனென்றால் நமது முக்கிய போட்டி நாடுகளான வங்கதேசத்தில் அரசியல் ஸ்திரமின்மை நிலவுகிறது. சீனாவை மட்டும் நம்பி இருக்க வேண்டாம் என அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் நிலையில், இந்தியா அதற்கு ஏற்றதாக இருக்கிறது. இப்போது டிரம்ப் வரி மட்டுமே ஒரே சிக்கலாக உள்ள சூழலில், அதை நீக்கிவிட்டால் எந்தவொரு பிரச்சினையும் இருக்காது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+