நரேந்திர தாமோதர்தாஸ் மோடி என்னும் நான்! 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார் மோடி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இன்று 3வது முறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்றார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 72 பேர் மத்திய அமைச்சர்களாக பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் பொறுப்பேற்றனர் .

நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. இதையடுத்து கடந்த 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்க தேவையான 272 எம்பிக்கள் கிடைக்கவில்லை.

narendra modi oath ceremony bjp nda cabinet ministers politics

யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் 240 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மத்தியில் ஆட்சி அமைக்கிறது. பாஜக கூட்டணி கட்சிகளுக்கு 52 எம்பிக்கள் உள்ளன. இதன்மூலம் பாஜகவுக்கு ஆட்சியமைக்க தேவையான 272 எம்பிக்களை விட கூடுதலாக 20 எம்பிக்கள் உள்ளன.

பாஜக கூட்டணி கட்சிகளை பொறுத்தமட்டில் ஆந்திராவில் செயல்பட்டு வரும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 எம்பிக்கள், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு 12 எம்பிக்கள், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுக்கு 7 எம்பிக்கள், சிராக் பஸ்வானின் லோக் ஜன கட்சிக்கு 5 எம்பிக்கள், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ்க்கு 2 எம்பிக்கள் உள்பட வேறு சிறுசிறு கட்சிகளுக்கு என்று மொத்தம் 52 எம்பிக்கள் உள்ளன.

இதையடுத்து நேற்று டெல்லி பழைய நாடாளுமன்றத்தில் உள்ள மைய மண்டபத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற லோக்சபாவில் பாஜக தலைமையிலான என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

பாஜக கூட்டணிக்கு ஆட்சியமைக்க தேவையான எம்பிக்கள் உள்ளதால் பிரதமர் மோடி தலைமையில் மத்திய ஆட்சியமைக்க ஜனாதிபதி திரெளபதி முர்மு அனுமதி வழங்கினார். இதையடுத்து இன்று இரவு 7.15 மணிக்கு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். கடந்த 2014, 2019 ஆண்டுகளை தொடர்ந்து தற்போது அவர் 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். இதன்மூலம் தொடர்ந்து 3 முறை பிரதமரான பெருமைக்கு சொந்தக்காரரான முன்னாள் பிரதமர் நேருவின் சாதனையை அவர் சமன் செய்கிறார்.

இந்த பதவியேற்பு விழாவின்போது பிரதமர் மோடியுடன் மத்திய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். இன்றைய தினம் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். அதன்படி சுமார் 30 பேர் வரை இன்று முதற்கட்டமாக மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம், சிவசேனா, ஜேடிஎஸ் உள்பட கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு 18 அமைச்சர்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதில் அதிகபட்சமாக தெலுங்குதேசம் கட்சிக்கு 4 மத்திய அமைச்சர் பதவியும், ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு 3 மத்திய அமைச்சர் பொறுப்பும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.அதன்படி

ராஜ்நாத் சிங் பா.ஜ.க
நிதின் கட்கரி பா.ஜ.க
அர்ஜுன் ராம் மேக்வால் பாஜக
சிராக் பாஸ்வான் எல்ஜேபி
எச்.டி.குமாரசாமி ஜே.டி.(எஸ்)
சர்பானந்தா சோனோவால் பாஜக
பிரகலாத் ஜோஷி பாஜக
சிவராஜ் சிங் சவுகான் பா.ஜ.க
சந்திர சேகர் பெம்மாசானி டி.டி.பி
ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு டி.டி.பி
ராம்நாத் தாக்கூர் ஜேடியூ
லாலன் சிங் ஜேடியூ
பிரதாப் ராவ் ஜாதவ் சிவசேனா
கே அண்ணாமலை பா.ஜ.க
அமித் ஷா பா.ஜ.க
ஜோதிராதித்ய சிந்தியா பா.ஜ.க
எம்எல் கட்டார் பா.ஜ.க
சந்திரசேகர் சௌத்ரி AJSU
ஜெயந்த் சவுத்ரி ஆர்.ஜே.டி
மன்சுக் மாண்டவியா பா.ஜ.க
அஸ்வினி வைஷ்ணவ் பாஜக
பியூஷ் கோயல் பா.ஜ.க
கிரண் ரிஜிஜு பா.ஜ.க
ரக்ஷா காட்சே பாஜக
கமல்ஜீத் செராவத் பா.ஜ.க
ராவ் இந்தர்ஜித் சிங் பா.ஜ.க
ராம்தாஸ் அத்வாலே இந்திய குடியரசுக் கட்சி
ஜிதன் ராம் மஞ்சி ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா
கிரிராஜ் சிங் பா.ஜ.க
பாண்டி சஞ்சய் பாஜக
உள்ளிட்டவர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த லிஸ்ட்டில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பெயர் இடம்பெற்றுள்ளார். இவர் கோவை லோக்சபா தேர்தலில் தோற்ற நிலையில் அவரது செயல்பாட்டை பாராட்டி பாஜக மேலிடம் மத்திய அமைச்சர் பதவி கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பதவியேற்பு விழாவில் பாஜக தலைவர்கள், வெளிநாட்டு தலைவர்கள், வெளிநாடுகளை சேர்ந்த தூதர்கள் உள்பட மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்கும் எம்பிக்களின் குடும்பத்தினர் பங்கேற்க உள்ளனர். இதனால் விழா நடைபெறும் ஜனாதிபதி மாளிகையை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+