‘பாரத்’ என மாறுதா ‘இந்தியா’.. பள்ளி புத்தகம் தொடர்பாக வெடித்த சர்ச்சை! NCERTயின் பரபர விளக்கம்
டெல்லி: என்.சி.இ.ஆர்.டி. பாடபுத்தகங்களில் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற பரிந்துரைக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அதனை மறுத்து உள்ளார் அதன் இயக்குநர் சக்லானி.
என்.சி.இ.ஆர்.டி. பாடபுத்தகங்களில் இந்தியா என்ற நாட்டின் பெயரை பாரத் என மாற்றுவது தொடர்பாக பரிந்துரைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சி.ஐ.ஐசக் தலைமையிலான என்.சி.இ.ஆர்.டி. குழு இந்த சர்ச்சை குறித்து விளக்கம் கொடுத்து உள்ளது.

அதில் இதுகுறித்து தற்போது கருத்து தெரிவிப்பது என்பது முன்கூட்டியே கூறுவதாகவிடும் என கூறி உள்ளது. பாரத் பெயர் மாற்ற பரிந்துரை தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தி, அரசியல் வாதிகளின் கருத்து தொடர்பாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அளித்து உள்ள விளக்கத்தில் தெரிவித்து உள்ளதாவது, "புதிய பாடத்திட்டம் மற்றும் பாட புத்தகங்கள் வடிவமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காகவே பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்களை சேர்த்து இருக்கிறோம்.
இந்த சூழலில் ஊடகங்களில் இது குறித்து வெளியான செய்திகள் பற்றி கருத்து தெரிவிப்பது என்பது முன்கூட்டியே கூறுவதாகிவிடும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவர் ஐசக் கூறுகையில், "நாங்கள் ஏகோபித்த கருத்தோடு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கான புத்தகங்களிலும் 'பாரத்' என்ற பெயரை பயன்படுத்துவதுவதற்கு பரிந்துரை செய்து உள்ளோம்." என்றார். இதுகுறித்து என்.சி.இ.ஆர்.டி. இயக்குநர் சக்லானி தெரிவிக்கையில், " என்.சி.எஃப் எனப்படும் தேசிய பாடத்திட்ட கட்டமைப்புதான் பாடத்திட்டத்துக்கான அதிகாரப்பூர்வ ஆவணமாகும்.
அதில் நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் என்று எந்த இடத்திலும் கூறப்படவில்லை. இவை அனைத்தும் வதந்திகள். இதுபோன்ற எதுவுமே நடக்கவில்லை. அப்படி பெயர் மாற்றப்படுவதாக கூறுபவர்கள் ஆவணங்களை காட்ட வேண்டும். நாங்கள் அப்படி செய்யவே இல்லை." என்று தெரிவித்து உள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் என்.சி.இ.ஆர்.டி. பாடபுத்தகங்களை வடிவமைக்க வரலாற்று ஆய்வாளரான ஐசக் தலைமையில் 25 குழுக்கள் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications