இந்தியாவில் உலக அழகி போட்டி.. அதுவும் 27 ஆண்டுகளுக்கு பிறகு.! இந்தியா சார்பில் பங்கேற்பது யார்
டெல்லி: 2023ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு உலக அழகி போட்டி மீண்டும் இந்தியாவில் நடக்க உள்ளது.
உலகெங்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 71ஆவது உலக அழகி போட்டி இந்த ஆண்டு நவம்பரில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்த நாடு இந்தப் போட்டியை நடத்தும் என்று அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்தச் சூழலில் உலக அழகி போட்டி இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது நவ. மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், எந்த தேதிகள் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்தியா கடைசியாக 1996 ஆம் ஆண்டு உலக அழகி போட்டியை நடத்தியது. இது குறித்து மிஸ் வேர்ல்ட் அமைப்பின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜூலியா மோர்லி கூறுகையில், "71ஆவது உலக அழகி இறுதிப் போட்டியை இந்தியா நடத்தும் என அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்... தனித்துவமான கலாச்சாரம், அழகிய இந்திய நகரங்களையும் காண நாங்கள் காத்திருக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
130 நாடுகளில் இருந்து அழகிகள் இந்த போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். சுமார் ஒரு மாத காலம் நடக்கும் இந்தப் போட்டியில் இந்தியாவில் பல நகரங்களில் போட்டியாளர்களின் திறமை வெளிக் கொண்டு வரும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். தற்போதைய உலக அழகியாக உள்ள போலந்தின் கரோலினா பைலாவ்ஸ்கா இப்போது இந்தியாவில் உலக அழகுப் போட்டி குறித்த விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உலக அழகி கரோலினா பைலாவ்ஸ்கா, "உலக அழகிக்கு நிகரான மதிப்புகளைக் கொண்ட இந்த அழகான நாட்டில் (இந்தியா) தனது கிரீடத்தை ஒப்படைப்பதில் மகிழ்ச்சி.. உபசரிப்பில் இந்தியாவைப் போல ஒரு நாட்டை பார்க்க முடியது.. இங்கு வந்தால் தாய் வீட்டிற்கு வந்தது போல உணர்வீர்கள்.. பன்முகத்தன்மை, ஒற்றுமை, மரியாதை, அன்பு என இங்கிருந்து பலவற்றை கற்றுக் கொள்ளலாம்" என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் இந்தியாவில் இருந்து தற்போதைய மிஸ் இந்தியா வோல்ட் சீனி ஷெட்டி கலந்து கொள்ள உள்ளார். இந்தப் போட்டி இந்தியாவிலேயே நடைபெறுவது தனக்கு மகிழ்ச்சியைத் தருவதாகச் சீனி ஷெட்டி தெரிவித்துள்ளார்.
உலக அழகி பட்டத்தை இதுவரை 6 முறையை இந்தியா வென்றுள்ளது. ரீட்டா ஃபரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹெய்டன் (1997), யுக்தா முகே (1999), பிரியங்கா சோப்ரா (2000), மற்றும் மனுஷி சில்லர் (2017) ஆகியோர் உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியர்கள் ஆவர்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications