பிரதமர் மோடிக்கு சிக்கல்? "இனி பாஜகவுக்கு எப்போதும் ஆதரவு இல்லை.." பிஜு ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு!
டெல்லி: நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜேடி கட்சி இத்தனை காலம் பல்வேறு நிகழ்வுகளில் நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு ஆதரவு அளித்து வந்தது. ஆனால், இனிமேல் பாஜகவுக்கு எப்போதும் ஆதரவு இல்லை என அறிவித்துள்ள பிஜு ஜனதா தளம், வலிமையான எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்தில் இயங்குவோம் என அறிவித்துள்ளார்.
பிஜு ஜனதா தளத்திற்கு ராஜ்யசபாவில் மொத்தம் ஒன்பது எம்பிக்கள் இருக்கும் நிலையில், அவர்களுடன் ஒடிசா முன்னாள் முதல்வரும் பிஜேடி கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக் ஆலோசனை நடத்தினார்.

நவீன் பட்நாயக்: இதற்கிடையே அந்தக் கூட்டத்திற்குப் பிறகு ஒடிசாவின் பிஜேடி தலைவர் நவீன் பட்நாயக் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இதற்கு மேல் பாஜகவுக்கு ஆதரவு இல்லை என்று அறிவித்த அவர் தனது கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் வலிமையான எதிர்க்கட்சிகளாகச் செயல்படுவார்கள் என்றும் அறிவித்தார்.
பாஜகவுக்கு ஆதரவு இல்லை என்பதை அறிவித்த நவீன் பட்நாயக், தனது கட்சி எம்பிக்கள் துடிப்பான மற்றும் வலுவான எதிர்க்கட்சியாகச் செயல்படுவார்கள் என்றும் கூறினார்..மேலும், ஒடிசா மாநில நலன்களுக்குக் குரல் கொடுக்குமாறும் மக்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
திட்டம் என்ன: இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிஜேடி மூத்த தலைவர் ராஜ்யசபா சஸ்மித் பத்ரா, "பிஜேடி எம்பிக்கள் இந்த முறை பிரச்சனைகளைப் பேசுவதில் மட்டும் நின்றுவிடக்கூடாது. மத்தியில் இருக்கும் பாஜக அரசு ஒடிசாவின் நலனைப் புறக்கணித்தால் அவையை முடக்கவும் அவர்கள் தயாராக உள்ளனர்.
ஒடிசாவுக்குச் சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து எழுப்புவோம். மாநிலத்தில் தொலைத் தொடர்பு சேவை மோசமாக இருக்கிறது. பல பகுதிகளில் வங்கிக் கிளைகள் கூட இல்லை. இவை தொடர்பாகவும் ஒடிசா எம்பிக்கள் நிச்சயம் கேள்வி எழுப்புவார்கள்.
ராயல்டி: நமது மாநிலத்தில் இருந்து எடுக்கப்படும் நிலக்கரிக்கு ராயல்டியை தர வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருகிறோம்.. ஆனால், இத்தனை காலமாக பாஜக அதைப் புறக்கணித்து வருகிறது. மாநிலத்திற்குக் கிடைக்க வேண்டிய உரிமை மறுக்கப்படுகிறது. இதனால் ஒடிசா மக்கள் பெரும் இழப்பை எதிர்கொள்கிறார்கள்.
ராஜ்யசபாவில் உள்ள ஒன்பது பிஜு ஜனதா தள எம்பிக்களும் இனி வலுவான எதிர்க்கட்சியாகச் செயல்படுவார்கள்.. நாடாளுமன்றத்தில் மாநில மக்களின் உரிமைகளுக்காகப் போராட வேண்டும் என்று நவீன் பட்நாயக் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்" என்றார்.
ஆதரவு இல்லை: இதற்கு முன்பு பிஜு ஜனதா எம்பிக்கள் பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசுக்கு ஆதரவு அளித்திருந்தனர். இனியும் அதேபோல பிரச்சினைகளுக்கு ஏற்ப ஆதரவு தருவீர்களா என்ற கேள்விக்கு பத்ரா, "இனி பாஜகவுக்கு எப்போதும் ஆதரவு இல்லை.. நாங்கள் எதிர்க்கட்சியாக மட்டுமே செயல்படுவோம். ஒடிசாவின் நலன்களைப் பாதுகாக்க நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம். இவ்வளவு நடந்துவிட்டது இனி பாஜகவை ஆதரிப்பது என்ற கேள்விக்கு இடமில்லை. எதிர்க்கட்சியாக மட்டுமே இருப்போம்.. ஒடிசா மக்களுக்காகக் குரல் கொடுப்போம்" என்றார்.
ஒடிசா: நவீன் பட்நாயக்கின் பிஜேடி கட்சிக்கு இப்போது ராஜ்யசபாவில் ஒன்பது எம்பிக்கள் உள்ளனர். அதேநேரம் சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பிஜேடி கட்சியால் ஒரு சீட்டில் கூட வெல்ல முடியவில்லை. 1997ல் ஒடிசா தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு லோக்சபா தேர்தலில் பிஜேடி ஒரு இடத்தில் கூட வெல்லாமல் போவது இதுவே முதல்முறையாகும்.
லோக்சபா தேர்தலுடன் ஒடிசாவில் சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது. அங்குக் கடந்த 24 ஆண்டுகளாக பிஜு ஜனதா தளம் ஆட்சியில் இருந்த நிலையில், இந்த தேர்தலில் அவர்களை வீழ்த்தி பாஜக ஆட்சியைப் பிடித்தது. பிஜு ஜனதா தளம் பாஜக கொண்டு வந்த பல சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவ் எம்பியாக தேர்வாகவும் உதவியது குறிப்பிடத்தக்கது.
-
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications