டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யெஸ் வங்கி விவகாரம்.. பிரதமர் மோடியை தாக்கி ராகுல் காந்தி போட்ட பரபரப்பு டுவிட்

Google Oneindia Tamil News

டெல்லி: யெஸ் வங்கியை மட்டுமல்ல.. பிரதமர் மோடியின் சிந்தனைகள் இந்தியாவின் பொருளாதாரத்தையே அழித்துள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    அதிரடி..YES BANK நிர்வாகத்தை கையில் எடுத்தது ஆர்.பி.ஐ

    கடந்த 2004ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எஸ் வங்கியில் தற்போது 18 ஆயிரத்து 238 பேர் பணியாற்றி வருகிறார்கள். நாடு முழுவதும் 1100க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.

    No Yes Bank, Modi and his ideas have destroyed India’s economy: Rahul gandhi

    இந்த வங்கியில் 2018ம் ஆண்டு வருவாய் 25491 கோடி ரூபாய் ஆக இருந்தது. இந்நிலையில் இந்த வங்கி வாராகடன் பிரச்சனையில் சிக்கியதால் நிதி நிலை மோசமடைந்துள்ளது. வங்கியை தொடர்ந்து நடத்த மூலதன முதலீடுகளை திரட்ட முடியாமல் தவித்து வருகிறது.

    யெஸ் பேங்க்-ல் டெபாசிட் செய்த திருப்பதி தேவஸ்தானத்தின் ரூ1,300 கோடி டெபாசிட் தப்பியது! யெஸ் பேங்க்-ல் டெபாசிட் செய்த திருப்பதி தேவஸ்தானத்தின் ரூ1,300 கோடி டெபாசிட் தப்பியது!

    யெஸ் வங்கியை வாடிக்கையாளர்கள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க ஒரு மாதத்திற்கு ரிசர்வ் வங்கி தடைவிதித்துள்ளது. இந்த வங்கியின் நிதிநிலைமையை ஆராய்ந்து சீரமைக்கும் முயற்சியில் ரிசர்வ் வங்கியும் , நிதியமைச்சகமும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் யெஸ் வங்கியில் பணம் போட்டவர்கள் அச்சத்தில் உள்ளார்கள். தங்கள் டெபாசிட் பணம் பறிபோகும் பயத்தில் உள்ளார்கள். அவர்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பணம் பாதுகாப்பாக இருக்கும் என உறுதி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் யெஸ் வங்கி விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, யெஸ் வங்கியை மட்டுமல்ல.. பிரதமர் மோடியின் சிந்தனைகள் இந்தியாவின் பொருளாதாரத்தையே அழித்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

    English summary
    congress forer leader Rahul gandhi on twitter: No Yes Bank, Modi and his ideas have destroyed India’s economy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X