11 எம்எல்ஏக்கள் வழக்கு... விசாரிக்க மறுக்கும் சுப்ரீம்கோர்ட்... தப்பி பிழைக்கும் எடப்பாடி அரசு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    11 எம்எல்ஏக்கள் வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு- வீடியோ

    டெல்லி: ஓ.பன்னீர் செல்வம் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கை உடனடியாக விசாரிக்க முடியாது என்று உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.

    ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் இபிஸ், ஓபிஎஸ் என இரு அணிகள் உருவாகின. அப்போது சசிகலா ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார்.

    சட்டசபையில் அவர் பெரும்பான்மை கோரும் போது அதிமுக கொறடா உத்தரவை மீறி,ஓபிஸ் தலைமையிலான 11 எம்எல்ஏக்கள் எதிர்த்து வாக்களித்தனர்.

    கடிதம் அளிப்பு

    கடிதம் அளிப்பு

    இதையடுத்து, திமுகவின் தரப்பில் அவர்களை பதவிநீக்க கோரி சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    தலையிட முடியாது

    தலையிட முடியாது

    இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது என்று நீதிமன்றம் கூறியது.

    உச்ச நீதிமன்றம்

    உச்ச நீதிமன்றம்

    இதையடுத்து, 11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடர்ந்தனர். திமுகவின் சக்கரபாணி மற்றும் டிடிவி தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    விசாரணை முடிந்தது

    விசாரணை முடிந்தது

    ஆனால் அந்த வழக்கு மீது இறுதி விசாரணை முடிந்துள்ளது. வழக்கின் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று நிலை உருவாகி உள்ளது.

    மறுக்கும் உச்ச நீதிமன்றம்

    மறுக்கும் உச்ச நீதிமன்றம்

    இந் நிலையில் அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதி மன்றம் கூறியிருக்கிறது. வழக்கை வேகமாக விசாரிக்க எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை என்றும் உச்சநீதிமன்றம் பதிலளித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+