Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"2 நாள் தான் டைம்.." மனு பாக்கர் பயிற்சியாளர் சமரேஷ் ஜங்கின் வீடு இடிக்கப்படுவதாக நோட்டீஸ்! பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஆகியோர் கொண்ட டீமிற்கு தேசியத் துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளராக இருந்த சமரேஷ் ஜங் சமீபத்தில் நாடு திரும்பினார். இதற்கிடையே நாடு திரும்பிய உடனேயே அதிர்ச்சி தரும் வகையில், அவரது வீடு இரண்டு நாட்களில் இடிக்கப்படும் என நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இப்போது ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் துப்பாக்கி சுடுதலில் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் இரண்டு வெண்கலத்தை வென்றுள்ளார்.

Olympics 2024 Manu Bhaker india 2024

முதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் அவர் வெண்கல பதக்கம் வென்றார். அடுத்து கலப்பு இரட்டையர் பிரிவிலும் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து வெண்கலம் வென்றார்.

சமரேஷ் ஜங்: இவர்கள் பதக்கங்களை வெள்ள முக்கிய காரணமாக இருந்தவர் தேசிய துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் சமரேஷ் ஜங்.. இவர் நேற்று முன்தினம் தான் பிரானஸில் இருந்து இந்தியா திரும்பினார். இதற்கிடையே நாடு திரும்பிய ஒரே மணி நேரத்தில் அவரது வீடு இடிக்கப்பட உள்ளதாகவும் இரண்டு நாட்களில் வீட்டை காலி செய்ய வேண்டும் என அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நோட்டீஸ்: மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் இந்த நோட்டீஸை வழங்கியுள்ளது. லைன்ஸ் பகுதியில் உள்ள கைபர் பாஸ் காலனி பகுதியில் தான் சமரேஷ் ஜங் வீடு அமைந்துள்ளது. இந்த கைபர் பாஸ் காலனி அமைந்துள்ள இடம் பாதுகாப்பு அமைச்சகத்திற்குச் சொந்தமானது என்பதால் இங்கே அமைந்துள்ள கட்டுமானங்கள் அனைத்தும் சட்டவிரோதமானது என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. மேலும், இரண்டு நாட்களில் வீட்டை காலி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சமரேஷ் ஜங் பிரபல ஆங்கில செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "நான் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் டெல்லி திரும்பினேன். அப்போது மாலை 6 மணியளவில் எனது வீடு இரண்டு நாட்களில் இடிக்கப்படும் என்றும் நான் உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் என்றும் நோட்டீஸ் வந்தது. எங்கள் பகுதி முழுக்க இந்த நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

புரியவில்லை: ஆனால், எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை.. எனது குடும்பம் கடந்த 75 ஆண்டுகளாக இங்கு தான் வசிக்கிறது. நான் உரிய வாடகை செலுத்தி வருகிறேன். மேலும், வரியை கூட தவறாமல் செலுத்தி வருகிறோம். அப்படி இது பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான இடம் என்றால் இதை இதில் எப்படி மக்கள் குடியிருக்க அனுமதித்தனர் என்பது எனக்கு புரியவில்லை.

இது குறித்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை விசாரிக்க உள்ளதாகக் கூறுகிறார்கள். அதேநேரம் நான் ஒன்றும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவன் இல்லை. சட்டப்படி இது ஆக்கிரமிக்கப்பட்ட இடம் என்றால் நான் வீட்டை காலி செய்துவிடுவேன். அதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. ஆனால், இரண்டு நாட்களில் காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்புவது முறை இல்லை. அது எப்படி சாத்தியம்.. வீடுகளை காலி செய்யக் குறைந்தபட்சம் இரண்டு மாதங்கள் அவகாசம் தேவை" என்றார்.

யார் இந்த சமரேஷ் ஜங்: 54 வயதான சமரேஷ் ஜங் நமது நாட்டின் முக்கியமான துப்பாக்கி சுடும் வீரராக இருந்தவர். கடந்த 2006 மற்றும் 2010 காமன்வெல்த் விளையாட்டுகளில் அவர் ஏழு தங்கம், ஐந்து வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். இப்போது அவர் தேசியத் துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளராக இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+