ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க சட்டம்..மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கே..மத்திய அரசின் முக்கிய பாயிண்ட்

ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க தேவையான சட்டங்களை இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க தேவையான சட்டங்களை இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. லோக்சபாவில் தமிழக எம்.பி பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்து கொண்டதால் இந்த சூதாட்டத்திற்கு விதிக்க தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது.

இதன்படி, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந்தேதி மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பல நாட்களாக இந்த மசோதா மீது ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார்.

 ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை

இந்த நிலையில், கடந்த 8-ந்தேதி திடீரென ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். மேலும் இந்த மசோதாவை நிறைவேற்ற தமிழக சட்டசபைக்கு அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார். அதாவது, மசோதாவை திருப்பி அனுப்பியது தொடர்பாக ஆளுநர் ஆா்.என்.ரவி விளக்கம் அளித்த விளக்கத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடைவிதிக்கும் சட்டம் கொண்டுவர தமிழக சட்டசபைக்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.

தடை செய்யும் மசோதா

தடை செய்யும் மசோதா

மேலும், சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு முகாந்திரம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "சட்டசபையில் மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்து இருந்தார். இதன்படி, மீண்டும் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றுவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.

பார்த்திபன் எம்.பி கேள்வி

பார்த்திபன் எம்.பி கேள்வி

அதாவது, தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆன்லைன் மசோதா தொடர்பான மசோத மீண்டும் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு மீண்டும் அனுப்பிவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மக்களவையில் மக்களவையில் பார்த்திபன் எம்.பி இவ்விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதில்ளித்த மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு

மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு

இது தொடர்பாக மத்திய அமைச்சர் எழுத்துப்பூர்வமாக அளித்த விளக்கத்தில், ஆன்லைன் சூதாட்டங்களை தங்கள் வரம்பிற்குள் கொண்டு வர தேவையனா சட்டங்கள் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. பந்தயம் சூதாட்டம் இரண்டும் அரசமைப்பின் 7-வது அட்டவணையின் பட்டியல் 2ல் வருகிறது. இதன்படி மாநில அரசுகளுக்கு சட்டம் இயற்றுவதற்கு அதிகாரம் உண்டு.

பொது சூதாட்ட சட்டம் 1867-ன் கீழ்

பொது சூதாட்ட சட்டம் 1867-ன் கீழ்

பொது சூதாட்ட சட்டம் 1867-ன் கீழ் பெரும்பாலான மாநில அரசுகள் இவற்றை எதிர்கொள்வதற்கு தங்களது சொந்த சட்டத்தை இயற்றியுள்ளன" என்று தனது பதிலில் அளித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்த நிலையில், மத்திய அரசு அளித்துள்ள மேற்கண்ட விளக்கம் அளித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+