ஆபரேஷன் கங்கா.. மீட்பு பணியில் களமிறங்கிய இந்திய விமானப்படை - பிரதமர் மோடி உத்தரவு!
டெல்லி: உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணிக்காக இந்திய விமானப்படையை அழைத்திருக்கிறார் பிரதமர் மோடி.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதால், உக்ரைனில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கியுள்ளார்கள். அவர்களை மீட்க 'ஆபரேஷன் கங்கா' என்ற பெயரில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், மீட்புப் பணியில் ஈடுபட இந்திய விமானப்படையை அழைத்திருக்கிறது மத்திய அரசு. விரைவில் விமானப்படை விமானங்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சென்று இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபடும்.
இந்த பணிகளை உக்ரைனில் இருந்து நேரடியாக செய்ய முடியாததால், அங்கு வசிக்கும் இந்தியர்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேற்றி, அங்கிருந்து விமானம் மூலம் தாய்நாடு அழைத்து வரப்படுகின்றனர்.
உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் இருந்து உக்ரைன்வாழ் இந்தியர்களுடன் அடுத்தடுத்து விமானங்கள் இந்தியா வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், ருமேனியாவின் புகாரெஸ்டில் இருந்து 182 இந்தியர்களுடன் புறப்பட்ட 7-வது விமானம் இன்று காலை மும்பை வந்தடைந்தது. அதேபோல் 8 வது விமானமும் தற்போது இந்தியா வந்துள்ளது. விரைவில் 9வது விமானம் உக்ரைனில் சிக்கி இருந்த இந்தியர்களை மீட்டு இந்தியா திரும்பும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்லார்.
இந்நிலையில், உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து குடியரசுத் தலைவரை சந்தித்துப் பேசினார் பிரதமர் மோடி. இந்நிலையில், இந்திய விமானப்படையை மீட்புப் பணிக்கு அழைத்திருக்கிறார் பிரதமர் மோடி.
இந்திய விமானப்படையில் உள்ள சி-17 என்ற அதிவேக விமானத்தை இந்த மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள். இதனால் இந்தியர்களை விரைவாகவும் பத்திரமாகவும் மீட்க முடியும் என்று தெரிவித்துள்ளார்கள்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications