ரூ.29,000 கோடி காலி.. இந்தியா தாக்குதலில் பாகிஸ்தான் இழந்தது என்ன? இனி மோது பார்க்கலாம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 7 ம் தேதி அதிகாலை முதல் 10 ம் தேதி மாலை 5 மணி வரை மொத்தம் 87 மணிநேரம் தீவிரமாக சண்டை நடந்தது. இதில் பாகிஸ்தானை நம் நாடு பந்தாடியது. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள், விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன. இந்நிலையில் தான் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான 87 மணிநேர சண்டையில் இருநாடுகளுக்கும் எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பது பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் பலியாகினர். இந்த கொடூர தாக்குதலுக்கு ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு தான் பொறுப்பேற்றுள்ளது.

operation-sindoor-how-much-each-country-spent-on-weapons-and-what-losses-they-in-fight

இந்த தாக்குதலுக்கு நம் நாடும் பதிலடி கொடுத்தது. ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் கடந்த 7 ம் தேதி நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 மணி வரை நம் நாடு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது.

இதையடுத்து இருநாடுகள் இடையேயான மோதல் என்பது அதிகரித்தது. பாகிஸ்தான் நம் மீது ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவி தாக்க முயன்றது. அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. அதன்பிறகு நம் நாடு நடத்திய ஏவுகணை தாக்குதலில் பாகிஸ்தானின் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள்,ரேடார் அமைப்புகள், விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன. இருநாடுகள் இடையே 10ம் தேதி வரை தொடர்ந்து மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தானால் நம்மை ஒன்று செய்யவில்லை. மாறாக நம் நாட்டின் துல்லிய தாக்குதலில் பாகிஸ்தான் நிலைக்குலைந்து போனது.

இதனால் அச்சமடைந்த பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று நம் நாட்டிடம் தஞ்சமடைந்தது. கடந்த 10ம் தேதி மாலையில் பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைக்கான அதிகாரி நம்நாட்டின் ராணுவ நடவடிக்கைக்கான அதிகாரியை தொடர்பு கொண்டு சண்டையை நிறுத்த கெஞ்சினார். இதற்கு நம் நாடு ஓகே சொன்னதையடுத்து இருநாடுகள் இடையே 87 மணிநேரமாக நடந்த மோதல் என்பது முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் தான் 87 மணிநேர மோதலில் இருநாடுகளுக்கு ஏற்பட்ட செலவு மற்றும் சேத மதிப்புகள் குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி நம் நாட்டை விட பாகிஸ்தான் தான் அதிக இழப்பை சந்தித்துள்ளது. மொத்தம் ரூ.29 ஆயிரம் கோடிக்கு பாகிஸ்தான் இழப்பை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது. பாகிஸ்தானை எடுத்து கொண்டால் நம் நாட்டை தாக்க ஏவுகணை, ட்ரோன் மற்றும் போர் விமானங்களை பயன்படுத்தியது.

பாகிஸ்தானை எடுத்து கொண்டால் விமானப்படைக்கு தான் அதிக இழப்பு என்பது ஏற்பட்டள்ளது. எஃப் 16 பிளாக் 52 போர் விமானங்கள் நம் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 350 மில்லியன் டாலராகும் என்று திங் டேங் சக்ரா பேச்சவார்த்தை அறக்கட்டளை ( think tank Chakra Dialogues Foundation or CDF) தெரிவித்துள்ளது. மேலும் 35 மில்லியன் மதிப்புடைய SAAB Erieye AWACS வழிக்காட்டும் விமானத்தை இழந்துள்ளது.

மேலும் 8 மில்லியன் மதிப்பு கொண்ட 2 Shaheen class ஏவுகணைகளை நம் நாடு தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ரூ.35 மில்லியன் டாலர் மதிப்புடைய IL-78 refueling tanker, 6 மில்லியன் மதிப்பு கொண்ட துருக்கி நாட்டின் Bayraktar TB2 UCAV droneகளை நம் நாடு அழித்துள்ளது. அதேபோல் சார்கோதா விமானதளத்தில் நம் நாடு நடத்திய தாக்குதலில் 100 மில்லியன் அமெரிக்க டாலருக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மொத்தமாக பார்த்தால் இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ரூ.29 ஆயிரம் கோடிக்கு சேதத்தை சந்தித்துள்ளது.

அதேபோல் பாகிஸ்தானை ஒப்பிடும்போது நம் நாட்டுக்கு பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் நம் நாடு பயன்படுத்திய ரஷ்யா தயாரிப்பான எஸ் 40, உள்நாட்டு தயாரிப்பான ஆகாஷ் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் உள்பட பிற வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் தான். இந்த அமைப்புகள் துல்லியமாக செயல்பட்டு பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வானிலேயே அழித்தது. இதனால் நம் நாட்டுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.

நம் நாட்டின் ரஃபேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறினாலும் அதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. இதுபற்றிய ஆதாரம் கேட்டதற்கு பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் ‛‛சமூக வலைதளங்களில் ஆதாரங்களை தேடுங்கள்'' என்று கூறியிருந்தார். இது பாகிஸ்தானின் பொய்யை தான் காட்டுகிறது.

இந்த 87 மணிநேர சண்டையில் நம் நாடு பாகிஸ்தான் தாக்குதலில் பெரிய இழப்பை சந்திக்காவிட்டாலும் கூட பல கோடிகளை அந்த நாட்டின் மீது தாக்க பயன்டுத்தி உள்ளது. குறிப்பாக நம் நாடு 15 பிரமோஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஏவுகணைகளை பயன்படுத்தி தான் நம் நாடு பாகிஸ்தானின் தாக்குதல்களை நடத்தியது. இதில் ஒரு ஏவுகணை தயாரிக்க ரூ.34 கோடி செலவாகும். அப்படி ஏன்றால் 15 ஏவகணைகளை நம் நாடு பயன்படுத்தி உள்ளது எனும்போது அதற்கு மட்டும் ரூ.510 கோடி வரை செலவு ஏற்பட்டு இருக்கும். அதேபோல் பிறவற்றுக்கும் நம் நாடு பல கோடிகளை செலவு செய்து பாகிஸ்தானை கதறவிட்டு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+