ஒரு நாயகி உதயமாகிறாள்.. தேசிய அளவில் உருவாகும் 3ம் அணி? மாநில கட்சிகளின் அசத்தல் பிளான் பி!
லோக்சபா தேர்தலுக்கு பின் தேசிய அளவில் மூன்றாவது அணி உருவாவதற்கான பிரகாசமான வாய்ப்புகள் தெரிகிறது.
Recommended Video
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு பின் தேசிய அளவில் மூன்றாவது அணி உருவாவதற்கான பிரகாசமான வாய்ப்புகள் தெரிகிறது.
லோக்சபா தேர்தலில் இதுவரை 4 கட்ட லோக்சபா தேர்தல்கள் முடிந்துள்ளது. இன்றும் ஐந்தாம் கட்ட தேர்தல் நடக்கிறது. மே 23 லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.
இந்தியாவின் புதிய பிரதமராக யார் பொறுப்பேற்பார் என்று பெரிய கேள்வி எழுந்துள்ளது. இதில் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் இல்லாமல் வேறு மாநில கட்சியை சேர்ந்த நபர்கள் கூட பிரதமர் ஆக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

என்ன நடக்க வாய்ப்பு
- இந்த லோக்சபா தேர்தலுக்கு பின் பின்வரும் 4 விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளது.
- காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பது. ஆனால் வாய்ப்பு குறைவு.
- பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பது. கொஞ்சம் மட்டுமே வாய்ப்புள்ளது.
- மாநில கட்சிகளின் ஆதரவுடன் பாஜக அல்லது காங்கிரஸ் ஆட்சி அமைப்பது.
மாநில கட்சிகள் எல்லாம் சேர்ந்து மூன்றாவது அணியை உருவாக்குவது.

ரேஸில் யார்
இதற்கான ரேஸில் சில முக்கிய மாநில தலைவர்கள் இருக்கிறார்கள்.
- மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.
- பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி.
- தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.
- சமாஜ்வாதி முன்னாள் தலைவர் முலாயம் சிங் யாதவ்.
அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு ஆகியோர் தங்களுக்கு பிரதமர் ஆக விருப்பமில்லை என்று ஏற்கனவே கூறிவிட்டனர். பெரும்பாலும் மாயாவதி இல்லை மமதாவிற்கே வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.

இரண்டு பிரச்சனை
இந்த நிலையில் இந்த மூன்றாவது அணி உருவாக்கத்திற்கு இரண்டே பிரச்சனைகள் மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது. அதன்படி சந்திரசேகர ராவிற்கும், சந்திரபாபு நாயுடுவிற்கும் இடையில் கடுமையான மனக்கசப்பு இருக்கிறது. இவர்கள் இருவரும் ஒரே அணியில் இணைவது சாத்தியமா என்பது தெரியவில்லை. அதேபோல் சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்னொரு பிரச்சனை
இரண்டாவது பிரச்சனை என்று பார்த்தால், காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றால், திமுக இந்த மூன்றாவது அணிக்கு ஆதரவு அளிக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை திமுக கூட்டணி 20க்கும் மேற்பட்ட இடங்களை பெற்று, காங்கிரஸ் இல்லாமல் வேறு ஒரு அணிக்கு திமுக ஆதரவு அளிக்குமா, ஸ்டாலின் அந்த முடிவை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்னொரு வாய்ப்பு
மூன்றாவது அணி உருவாகவில்லை என்றாலும் கூட, எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றாக ஒரு குடையின் கீழ் இணைய வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். ஆனால் எதிர்க்கட்சிகள் எல்லாம் காங்கிரஸ் கட்சியுடன் ஒன்று சேர்ந்து, ராகுல் காந்தி இல்லாமல் வேறு ஒரு நபரை பிரதமராக தேர்வு செய்யவும் வாய்ப்புள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications