என்ன பாஜகவே ஜெயிக்குது.. இவிஎம் மீது மீண்டும் சந்தேகம்.. திரண்ட எதிர்க்கட்சி தலைகள்..பரபரத்த டெல்லி
டெல்லி: அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் இவிஎம் எனும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீதான சந்தேகம் தொடர்பாக டெல்லியில் இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தலைமையில் காங்கிரஸ், ஆம்ஆத்மி, சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்பட பல கட்சி தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக உற்று கவனிக்க தொடங்கி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் ஹாட்ரிக் வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜக வியூகம் வகுத்து வருகிறது. மாறாக பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகங்கள் வகுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் பாஜகவை வீழ்த்த தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்க முயன்று வருகிறது. அதேபோல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோரும் தேசிய அளவில் காங்கிரஸ் இல்லாத கூட்டணியை அமைக்க கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வருகின்றன.

சரத்பவார் பரபர கடிதம்
இந்நிலையில் தான் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் நேர்மையான சுதந்திரமான தேர்தலுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மிகவும் துல்லியாக இருக்க வேண்டும். சந்தேகம் எழுந்தால் தலைமை தேர்தல் ஆணையர் தீர்த்து வைக்க வேண்டும். 'சிப்' பொருத்தப்பட்ட எந்த இயந்திரத்திலும் தில்லுமுல்லு செய்யலாம் என்று நிபுணர்கள் கூறும் நிலையில் பேராசை கொண்ட சக்திகளால் ஜனநாயகம் களவாடப்படுவதை அனுமதிக்க முடியாது. நேர்மையான தேர்தல் நடப்பதற்காக, நாம் அனைவரும் அமர்ந்து ஆலோசனை நடத்த வேண்டும்'' என கூறியிருந்தார்.

எழுத்துப்பூர்வமாக பதில்
இந்த கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குறித்த சந்தேகங்களை இந்திய தேர்தல் ஆணையம் கண்டிப்பாக தீர்க்க வேண்டும் என தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் உள்ள சந்தேகம் மற்றும் பயங்களை போக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும் என கூறினார்.

தேர்தல் ஆணையத்தை நாட முடிவு
மேலும் இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தை எதிர்க்கட்சிகள் சார்பில் அணுகவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த கூட்டத்துக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திக்விஜய் சிங் கூறுகையில், ‛‛மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தனித்துவமான இயந்திரங்கள் என இந்திய தேர்தல் ஆணையம் கூறகிறது. ஆனால் அது அப்படியில்லை என சிலர் கூறுகின்றனர். வேட்பாளர்கள் பெயர், கட்சி சின்னங்கள் உள்ளிட்டவை இணையதளம் மூலம் உள்ளீடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களுக்கு சந்தேகங்களை இந்திய தேர்தல் ஆணையம் தீர்க்க வேண்டும்'' என்றார்.

வெளிநாடுகளில் பயன்பாடு இல்லை
இதுபற்றி கபில் சிபல் கூறுகையில், ‛‛மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான விஷயத்தில் நாங்கள் மீண்டும் தேர்தல் ஆணையத்திற்குச் சென்று எழுத்துப்பூர்வ பதில்களைப் பெற விரும்புகிறோம். அவர்கள் அதை செய்விட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வோர். உலகில் உள்ள எந்த இயந்திரத்தையும் முடக்க முடியும் என கூறுகின்றன. இதனால் தான் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவது இல்லை'' என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications