வெங்கையா நாயுடு, நடிகர் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷன் விருது.. மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: 2024 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்ம விபூஷன் விருதகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, தமிழகத்தை சேர்ந்த பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மிகவும் உயரிய விருதாக பத்ம விருதுகள் உள்ளன. பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ என மூன்று பிரிவுகளாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

குடியரசு தினத்தை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பத்ம ஸ்ரீ விருதுகள் மொத்தம் 34 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தின் கோவையை சேர்ந்த வள்ளி ஒயில் கும்மி நடனக் கலைஞர் பத்ரப்பனுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் பத்ம பூஷன் விருது மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்குள் அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி பாத்திமா பீவி (மறைவுக்கு பின்), நடிகர் மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்டோருக்கு பத்ம பூஷன் விருது அளிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பத்ம விபூஷன் விருதகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிற்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கும் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழகத்தை சேர்ந்த பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியத்திற்கும் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், விஜயந்திமாலா பாலி, பிந்தேஸ்வர் பதாக் (மறைவுக்கு பின்) ஆகியோருக்கும் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications