பான் கார்டு இனி செல்லாதா? புதிய "பான் 2.0" வருகிறது.. வாவ், இத்தனை வசதிகளா? மத்திய அரசு சொல்வதென்ன?
டெல்லி: பான் அட்டைகள் முழுவதுமாக, டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளது. அதிநவீன வசதியுடன், பான் கார்டுகளை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.. பான் 2.0 என்ற அதிநவீன வசதி கொண்ட பான் கார்டுகளை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது..
பான் கார்டுகளை பொறுத்தவரை, ரேஷன் கார்டுகளை போல ஒவ்வொரு குடிமகனுக்கும் தவிர்க்க முடியாத ஆவணமாகிவிட்டது.. வரி ஏய்ப்புகளை தடுப்பதில், பான் கார்டுகள் முக்கிய பங்காற்றி வருகின்றன.

செயல்பாடுகள்: அதேபோல, நாட்டிலுள்ள மொத்த வரி வருவாயை கணக்கிடுவதிலும் பான் அட்டைகள் பிரதான கருவியாக விளங்குகின்றன. இதுவே, ஒட்டுமொத்த வரி பங்களிப்புகளை மதிப்பிடுவதற்கும், இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும் பேருதவி புரிகின்றன.
குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணம் டெபாசிட் செய்வதற்கும், பணம் எடுப்பதற்கும் பான் அட்டைகள் அவசியம்.. கடன் வாங்குவது, வங்கி கணக்கு தொடங்குவது, பங்கு வர்த்தக கணக்கு தொடங்குவது, வீட்டுக்கடன் வாங்குவது, மோட்டார் வாகனக்கடன் வாங்குவது போன்ற நிதி தொடர்பான வேலைகளில் பான் கார்டுகளின் தேவையும் அவசியமாகின்றன.
மொத்தத்தில், அனைத்து வரி பரிவர்த்தனைகள், வருமானத்தின் மீதான வருமானம், TDS/TCS கிரெடிட்கள், கடித பரிமாற்றங்கள், குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை இணைக்க பான் கார்டுகளே உதவுகின்றன. அதனால்தான், பல்வேறு மோசடிகளை தவிர்ப்பதற்கும், தடுப்பதற்கும் பான் கார்டை, பண பரிமாற்றங்களுக்கு கட்டாயமாக்கியிருக்கிறது மத்திய அரசு..
நவீன வசதியுடன் பான் அட்டை: இந்நிலையில், பான் 2.0 என்ற அதிநவீன வசதி கொண்ட பான் அட்டை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது.. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், இந்த பான் 2.0 அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் அறிவித்திருக்கிறது.. நவீன வசதிகளுடன் கூடிய இந்த பான் 2.0 அட்டைகளை எப்படி பெறுவது? இந்த 2.0 அட்டையின் ஸ்பெஷாலிட்டி என்னென்ன? புதிய பான் கார்டு வாங்கினால், பழைய பான் கார்டு செல்லுபடியாகாதா? என்பது குறித்தும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பான் அட்டையில் கியூஆர் கோடு இடம்பெற்றிருக்கும்.. தற்போது நடைமுறையிலுள்ள பான் கார்டுகளில், எண் மற்றும் எழுத்தில் 10 இலக்க அடையாள குறியீடு உள்ளது. இதனை கியூஆர் கோடாக மாற்றுவதன் மூலம், வரி செலுத்துபவர்களுக்கு டிஜிட்டல் சேவை மேம்படுத்தப்படுவதுடன், வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிகிறது. அதுமட்டுமல்ல, இதில், பாதுகாப்பு, செலவினம் குறைப்பு போன்ற வசதிகள் உள்ளதாகவும் மத்திய அரசு கூறுகிறது.
புதிய பான் கார்டு: எனவே, இதனை செயல்படுத்துவதற்கு ரூ.1,435 கோடி செலவிட, மத்திய அமைச்சரவை ஒப்புதலும் அளித்துள்ளது. அத்துடன், பழைய பான் கார்டுகளை மேம்படுத்தி, டிஜிட்டலாக நவீன பான் கார்டு பயனாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.
இந்த பான் 2.0 பற்றி அமைச்சர் சொல்லும்போது, "காகிதமின்றி முழுவதும் ஆன்லைனில் பிரத்யேக இணையத்தளம் வாயிலாக இதனை செயல்படுத்த உள்ளோம்.. பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கு ஒருங்கிணைந்த மையமாக இது இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விளக்கம்: தொடர்ந்து அமைச்சர் பேசும்போது, "இந்த புதிய பான் கார்டு வாங்கினால், பழைய பான் கார்டு செல்லுபடியாகாதா என்று பலருக்கும் சந்தேகம் இருக்கலாம்.. ஆனால், உங்களுடைய பான் எண் மாறாததால், அதை பற்றி கவலையடைய தேவையில்லை என்றும், தற்போதுள்ள பான் கார்டுகளில் உள்ள எண்களுக்கு பதிலாக க்யூ.ஆர்.கோடுடன் புதிய கார்டு இலவசமாக வழங்கப்படும்" என்றும் மத்திய அமைச்சர் விளக்கம் தந்துள்ளார் .
இந்த புதிய நடைமுறைகள் மூலம், வரி செலுத்துவோருக்கு சேவைகள் வேகமாக கிடைககும்.. இது முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் இருக்கும் என்பதால் இதற்கான செலவுகள் குறையும்... சுற்றுச்சூழலையும் பெரியளவில் பாதிக்காத ஒன்றாக இருக்கும்.மேலும், பான் வெலிடெஷன் சர்வீஸையும் இது எளிதாக்க செய்யும் என்று நம்பப்படுகிறது.. ஆனால், பான் கார்டு வைத்திருப்பவர்கள் புதிய கார்டுகளுக்கு விண்ணப்பிக்க தேவையில்லை.. க்யூஆர் கோட் உடன் கூடிய பான் கார்ட் தேவைப்படுவோர் மட்டும் விண்ணப்பித்து கொள்ளலாம். இது இலவசமாகவே வழங்கப்படும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications