நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் தொடங்கியது.. அஜெண்டா என்ன? என கேட்டு "இந்தியா" எம்பிக்கள் முழக்கம்
டெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் இன்று பழைய கட்டடத்திலேயே தொடங்கியது. இந்த கூட்டம் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால பயணம் என்ற தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது.
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் வரும் 18ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்கள் எதையும் மத்திய அரசு வெளியிடவில்லை. இந்த கூட்டத்தில் சில முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம் என்பதால் இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் நாடாளுமன்ற செய்தி இதழில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் அரசியல் நிர்ணய சபை தொடங்கப்பட்டது முதல் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால பயணம் வரை இந்த கூட்டத் தொடரில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதா மக்களவையில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவும் இன்று தாக்கல் செய்யப்படலாம் என தெரிகிறது.
சிறப்புக் கூட்டத் தொடரின் முதல் நாள் நாடாளுமன்றத்தின் பழைய கட்டடத்திலும், எஞ்சிய 4 நாள் கூட்டங்கள் புதிய கட்டடத்திலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அவையை சுமூகமாக நடத்துவது குறித்தும் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்றைய தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நாளை (இன்று) குழு புகைப்படம் எடுக்கப்படும் என்றார்.
இதைத் தொடர்ந்து அனைவரும் புதிய கட்டடத்திற்கு செல்வோம் என்றும் அவர் கூறியிருந்தார். இன்றைய தினம் இந்த கூட்டத் தொடரில் சனாதனம், பாரத், "இந்தியா" கூட்டணி, நீட் தேர்வு, காவிரி விவகாரம், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்டவைகளை எழுப்ப எதிர்க்கட்சி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்த கூட்டத் தொடரில் வழக்கறிஞர்கள் மசோதா, தபால் நிலைய மசோதா 2023 உள்ளிட்டவை நிறைவேற்றப்படும் என்றும் தெரிகிறது.
முதல் நாள் கூட்டம் பழைய கட்டடத்தில் தொடங்கியது. அதில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால பயணம் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று வருகிறது. சிறப்பு கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரல் என்ன என கேட்டு எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டு வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications