வக்பு சட்ட மசோதா திருத்தங்களுக்கு கூட்டு குழு ஒப்புதல்.. இன்று மக்களவைத் தலைவரிடம் சமர்ப்பிப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நமது நாட்டில் வக்பு சொத்துகளை நிர்வகிக்க இருக்கும் வக்பு வாரிய சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு வக்பு வாரிய சட்ட திருத்தத்தை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்திருந்தது. இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டு இருந்த நிலையில், மசோதாவில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பான அறிக்கைக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இந்த மசோதா இன்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இந்தியாவில் உள்ள மசூதிகள், தர்காக்கள், மதரஸாக்களுக்காக இஸ்லாமிய மக்கள் பலரும் நிலத்தைத் தானமாக வழங்கியுள்ளனர். இவை தான் வக்பு வாரிய சொத்துகள் என்று அழைக்கப்படுகிறது. இதற்காக 1954ம் ஆண்டு வக்பு வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது.

waqf bill waqf bill amendment

தொடர்ந்து 1958இல் எல்லா மாநிலங்களிலும் வக்பு வாரியங்கள் அமைக்கப்பட்டன. வக்பு வாரியங்கள் மூலம் வக்பு சொத்துகளைக் கண்காணிக்கப்படும். இதற்கான விரிவான சட்டம் 1995ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலையில், 2013ம் ஆண்டு இந்த சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.

வக்பு வாரிய சட்டம்:

வக்பு வாரியங்களுக்குக் கூடுதல் அதிகாரம் தரப்படும் வகையில் சட்டம் திருத்தப்பட்டது. இதற்கிடையே தற்போதுள்ள மத்திய அரசு இந்த சட்டத்தை மீண்டும் திருத்த முடிவு செய்தது. இதற்கான மசோதாவை கடந்த ஆகஸ்ட் மாதம் முன்மொழிந்தது. மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ முன்மொழிந்த மசோதாவில் மொத்தம் 40 திருத்தங்கள் இருந்தன.

இருப்பினும், இந்த மசோதா வக்பு வாரியத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் இருப்பதாகச் சொல்லி காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், மஜ்லீஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கடும் விவாதம் நடந்த நிலையில், இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழு அனுப்பி வைக்கப்பட்டது. நாடாளுமன்ற கூட்டக்குழுவில் கூட இந்த விவகாரத்தில் காரசார விவாதங்கள் நடந்தன.

இன்று சமர்ப்பிப்பு:

இதற்கிடையே வக்பு சட்டத் திருத்த மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்த அறிக்கைக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு நேற்று ஒப்புதல் அளித்தது. கூட்டுக்குழுவில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பெரும்பான்மை அடிப்படையில் இந்த அறிக்கைக்கு ஒப்புதல் கிடைத்தது. இது மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது.

ஆதரவாக எதிராக வாக்குகள்:

மசோதாவில் 14 சட்டப் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்த ஆளும் தரப்பு எம்பிக்கள் 32 திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அவை முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.. அதேநேரம் எதிர்க்கட்சி எம்பிக்கள் பரிந்துரைத்த 500+ பரிந்துரைகளை அப்படியே மொத்தமாக நிராகரிக்கப்பட்டன. இது எதிர்க்கட்சி எம்பிக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஒப்புதல்:

சட்டத் திருத்தங்கள் குறித்த அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக நேற்று நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டம் கூடியது. அதில் வரைவு அறிக்கைக்கு ஆதரவாக 15 உறுப்பினர்களும் எதிராக 11 போ் எதிராகவும் வாக்களித்தனர். இதையடுத்து பெரும்பான்மை அடிப்படையில் அறிக்கை நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த சட்டத் திருத்தம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+