13 நாட்களில் 11 முறை உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. இன்றும் அதிகரித்த விலை.. சதத்தை நெருங்கும் டீசல்
டெல்லி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த 13 நாட்களில் தொடர்ந்து 11 முறை பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இன்றும் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. முன்னதாக 5 மாநில தேர்தல் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.

கடந்த ஆண்டு நவம்பர் 5 முதல் 137 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி இருந்தது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.81, டீசல் ரூ.91.88 என ஒரே விலையில் பெட்ரோல், டீசல் விலை இருந்தது.
ஆனால் தேர்தல் முடிந்த பின் பெட்ரோல், டீசல் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டது. கடந்த 13 நாட்களில் தொடர்ந்து 11 முறை பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 காசுகள் உயர்த்தப்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் 108. 96 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 76 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் டீசல் 99.04 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் டீசல் விலை விரையில் 100 ரூபாயை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் இதுவரை பெட்ரோல் விலை 7.53 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை 7.61 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை மாற்றிக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் தற்போது ரஷ்யா - உக்ரைன் போருக்கு இடையிலும் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் தற்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 99.18 டாலருக்கு விற்கப்படுகிறது. ஆனால் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.












Click it and Unblock the Notifications