இந்தியாவின் வளர்ச்சியை பாருங்கள்.. பாஜக ஆட்சியை புகழ்ந்த ராஷ்மிகா.. உடனே மோடி கொடுத்த ரியாக்ஷன்
டெல்லி: நாட்டின் உள்கட்டமைப்பு சார்ந்த திட்டமிடல் அபாரமாக உள்ளது. இந்த வளர்ச்சியானது இதோடு நின்று போய்விடக்கூடாது. நாட்டின் வளர்ச்சிக்காக வாக்களியுங்கள். இந்தியா ஸ்மார்ட்டான நாடு.. என்று மோடியின் 10 ஆண்டு ஆட்சியை நடிகை ராஷ்மிகா மந்தனா பாராட்டிய நிலையில், அவருக்கு பிரதமர் மோடி பதில் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழில் வாரிசு, தெலுங்கில் கீதா கோவிந்தம், புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா அண்மையில் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராஷ்மிகா மந்தனா பேட்டி: அதில், நாட்டிலேயே மிகப்பெரிய கடல் பலமான மும்பை - நவி மும்பையை இணைக்கும் அடல் சேது பாலத்தை பற்றி பேசியிருந்தார். மேலும் இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளில் பிரமிக்கத்தக்க வகையில் இருப்பதாகவும் ராஷ்மிகா மந்தனா கூறினார். இது தொடர்பாக பேட்டி அளித்து இருந்த ராஷ்மிகா மந்தனா கூறியதாவது: -
முடியாது என்று யாரும் சொல்ல முடியாது: மும்பை - நவி மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக 'அடல் சேது' பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மூலம் இரண்டு மணி நேர பயணம் 20 நிமிட பயணமாக மாறியுள்ளது.
இத்தகைய உள்கட்டமைப்பு வசதிகளால்தான் எளிதில் நம்மால் பயணம் மேற்கொள்ள முடிகிறது. இது பெருமை அளிக்கும் விஷயமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா கண்டிருக்கும் வளர்ச்சியைப் பாருங்கள். இந்தியாவால் இது முடியாது என்று யாராலும் இனி சொல்ல முடியாது. நாடு அனைத்து துறையிலும் வேகமாக வளர்ச்சி அடைகிறது.
பிரதமர் மோடி பதில்: நாட்டின் உள்கட்டமைப்பு சார்ந்த திட்டமிடல் அபாரமாக உள்ளது. இந்த வளர்ச்சியானது இதோடு நின்று போய்விடக்கூடாது. நாட்டின் வளர்ச்சிக்காக வாக்களியுங்கள். இந்தியா ஸ்மார்ட்டான நாடு.. " என்று பேசியிருந்தர். இந்த பேட்டியின் முன்னோட்டம் ஒன்றையும் ராஷ்மிகா மந்தனா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருந்தார்.
அடல் சேது பாலத்தில் இருந்து ராஷ்மிகா பேசும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. ராஷ்மிகா மந்தனாவின் இந்த பதிவு பற்றி ரியாக்ட் செய்துள்ள பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- "நிச்சயமாக.. மக்களை இணைப்பதையும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதையும் விட திருப்திகரமானது எதுவும் இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.
அடல் சேது பாலம்: மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை மற்றும் அருகில் உள்ள நவிமும்பை நகரங்களை இணைக்கும் விதமாக அரபிக்கடலில் 22 கி.மீ. தூரத்துக்கு பிரம்மாண்ட கடல் பாலம் கட்டப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு கட்டுமான பணி தொடங்கிய நிலையில், கடந்த ஜனவரி மாதம் இந்த பாலம் திறந்து வைக்கப்பட்டது.
ரூ.17,843 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், நாட்டின் மிக நீளமான கடல்வழி பாலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. மும்பை சிவ்ரி பகுதியில் தொடங்கி நவிமும்பை புறநகரான சிர்லேவில் இந்த பாலம் முடிவடைகிறது. இந்த பாலத்தில் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் செல்ல அனுமதி கிடையாது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications