லடாக்.. மாநில முதல்வர்கள் மீட்டிங்கில் திடீரென கலந்து கொண்ட ராஜ்நாத் சிங்.. மோடியுடன் தீவிர ஆலோசனை!

மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்ய இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை செய்து வருகிறார். இதில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கலந்து கொண்டு உள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ளது. கட்டுக்கடங்காத வேகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் இன்றும் நாளையும் மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்ய இருக்கிறார். இன்றைக்கான கூட்டம் தற்போது தொடங்கி உள்ளது.

ராஜ்நாத் சிங் வந்தார்

ராஜ்நாத் சிங் வந்தார்

மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கொரோனா குறித்து ஆலோசனை செய்து வருகிறார். முதலில் இந்த கூட்டம் கொரோனா குறித்து மட்டுமே விவாதிக்கப்படுவதாக இருந்தது. தற்போது இதில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கலந்து கொள்ள இருக்கிறார். இதனால் சீனா - இந்தியா பிரச்சனை குறித்தும் இதில் ஆலோசிக்க உள்ளனர்.

 லடாக் எதிர்வினை

லடாக் எதிர்வினை

லடாக் எல்லையில் தற்போது போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்தியா - சீனா ராணுவம் இடையே லடாக் எல்லையில் நேற்று இரவு நடந்த சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் இரண்டு பேரும் ஒரு ராணுவ அதிகாரியும் வீர மரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சண்டைக்கு இரண்டு நாடுகளும் எப்படி எதிர்வினையாற்றும் என்று கேள்வி எழுந்துள்ளது.

என்ன ஆலோசனை

என்ன ஆலோசனை

இந்த சண்டை காரணமாக எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த பதற்றத்தை தொடர்ந்து முப்படை தளபதிகள் உடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை செய்தார். எல்லையில் என்ன சூழ்நிலை இருக்கிறது என்பது தொடர்பாக அவர் ஆலோசனை செய்தார். அதேபோல் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனும் ராஜ்நாத் சிங் தீவிரமாக ஆலோசனை செய்தார்.

விளக்குவார் என்று எதிர்பார்க்கபடுகிறது

விளக்குவார் என்று எதிர்பார்க்கபடுகிறது

இந்த மீட்டிங் இதனால் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. எல்லை பிரச்சனை குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் மோடியிடம் விளக்குவார். அதேபோல் மாநில முதல்வர்களிடம் விளக்கம் அளிப்பார். மிக முக்கியமான கட்டத்தில் இப்படி ஒரு மீட்டிங் நடக்கிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+