குறைவான வேக்சின் விநியோகம்.. தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநில முதல்வர்களுடன்.. நவ.3ல் பிரதமர் ஆலோசனை
டெல்லி: தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வரும் நவம்பர் 3ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தியாவில் இதுவரை 100 கோடிக்கும் அதிகமான கொரோனா வேக்சின் டோஸ்கள் போடப்பட்டுள்ளது. இதுவரை 1,06,26,31,351 கொரோனா டோஸ்கள் போடப்பட்டுள்ளது. 73,35,42,729 பேருக்கு ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது.
32,90,88,622 பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. 18+ வயது கொண்டவர்களில் இந்தியாவில் இன்னும் 30 கோடி பேர் வரை ஒரு டோஸ் வேக்சின் கூட போடாமல் இருக்கிறார்கள். 70 கோடி பேருக்கு இரண்டாவது டோஸ் போட வேண்டும். இந்தியாவில் 30 சதவிகிதம் பேர் இரண்டு டோஸ் வேக்சின் போட்டுள்ளனர்.

ஆலோசனை
இந்த நிலையில்தான் தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வரும் நவம்பர் 3ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.தேசிய சராசரியுடன் ஒப்பிடும் போது குறைவாக வேக்சின் போடப்பட்ட மாநில முதல்வர்களோடு பிரதமர் மோடி உரையாட உள்ளார். அதாவது 30 சதவிகிதத்திற்கும் குறைவாக இரண்டு டோஸ் போட்ட மாநிலங்கள், 50 சதவிகிதத்திற்கும் குறைவாக 1 டோஸ் போட்ட மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழ்நாடு
அதன்படி தமிழ்நாடு, பீகார், ஜார்கண்ட், மஹாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, நாகலாந்து, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 11 மாநிலங்கள் முதல் அல்லது இரண்டாவது டோஸ் வேக்சின் செலுத்துவதில் தேசிய சராசரியை விட குறைவாக வேக்சின் போட்டுள்ளது. இந்த மாநிலங்கள் தனிப்பட்ட வகையில் அதிக டோஸ்களை செலுத்தி இருந்தாலும், தங்கள் மக்கள் தொகையில் இன்னும் பலருக்கு இரண்டாவது டோஸ் வேக்சின் போடவில்லை.

எத்தனை டோஸ்கள்
உதாரணமாக தமிழ்நாட்டில் 5,88,08,980 கோடி டோஸ்கள் வேக்சின் போடப்பட்டுள்ளது. ஆனால் 1,75,71,321 பேருக்கு மட்டுமே இரண்டு டோஸ்கள் போடப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் 13,07,99,398 டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. 3,26,51,081 பேருக்கு மட்டுமே இரண்டு டோஸ்கள் போடப்பட்டுள்ளது. இதனால் தங்கள் மக்கள் தொகையில் 30 சதவிகிதத்திற்கும் குறைவான நபர்களுக்கு இரண்டு டோஸ் போட்டுள்ளதால் இவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

பிரதமர் மோடி
நவம்பர் 3ம் தேதி பிற்பகல் 12 மணிக்கு ஆன்லைன் மூலம் இந்த மீட்டிங் நடக்க உள்ளது. 40 மாவட்டங்களை சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரிகளும், மாநில சுகாதாரத்துறை செயலாளர்களும் இதில் கலந்து கொள்ள உள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டியாவும் இந்த ஆலோசனையில் கலந்து கொள்ள உள்ளனர்.












Click it and Unblock the Notifications