பிரதமர் நரேந்திர மோடி கூட்டணி கட்சிகளுக்கு தந்த சர்ப்ரைஸ்.. அமைச்சரவை குழுவில் நடந்த அதிசயம்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள் குழு ஜூன் 9 ஆம் தேதி மீண்டும் பதவியேற்று மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்ற நிலையில் மூன்று வாரங்களுக்குப் பிறகு கேபினட் அமைச்சர்வை குழுக்களின் உறுப்பினர்கள் யார் யார் என்று அறிவிக்கப்பட்டுள்ளார்கள்
2 முறை பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த நிலையில், 3வது முறை நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியை நடத்துகிறது. இதை உணர்த்தும் வகையில் நேற்று (புதன்கிழமை) புதிதாக அமைக்கப்பட்ட கேபினட் அமைச்சரவை குழுக்கள் மற்றும் அமைச்சரவை குழுக்களில் உள்ள உறுப்பினர்களின் லிஸ்ட் இருந்தது.

கடந்த 2014ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜகவின் கூட்டணிக் கட்சிகள்தான் அமைச்சரவை குழுவில் அதிக உறுப்பினர்களை பெற்றுள்ளன.
அதேநேரம் பாதுகாப்புக்கான அனைத்து முக்கியமான அமைச்சரவைக் குழுவில் எந்த மாற்றமும் இல்லை. . பிரதம மந்திரி தலைமையில், பாதுகாப்பு, உள்துறை, நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் அடங்கிய குழுவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.இதில் மட்டுமே எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த குழு தான் நாட்டின் பாதுகாப்புச் செலவுகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் மூத்த நியமனங்கள் உட்பட அனைத்து தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்களிலும் முடிவுகளை எடுக்கிறது.
அதேநேரம் பொருளாதாரம் மற்றும் அரசியல் விவகாரங்கள் மற்றும் மத்திய-மாநில உறவுகள் மற்றும் 'சூப்பர் கேபினட்' என்று அழைக்கப்படும் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில், இப்போது தெலுங்கு தேசம் கட்சியின் கே ராம்மோகன் நாயுடு மற்றும் இந்துஸ்தானி அவம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) தலைவர் ஜிதன் ராம் மஞ்சி ஆகியோர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில்
ஜிதன் ராம் மஞ்சி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (எம்எஸ்எம்இ) அமைச்சராகவும், ராம்மோகன் நாயுடு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகவும் உள்ளார். இதேபோல் பீகாரின் ஜக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த லாலன் சிங், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் இடம்பிடித்துள்ளார்.
இதேபோல் மற்றொரு முக்கிய பீகார் கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி கட்சியின் (ராம்விலாஸ்) தலைவரான சிராக் பாஸ்வான், முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவைக் குழுவில் இடம் பெற்றுள்ளார். இதில் லாலன் சிங் அல்லது ராஜீவ் ரஞ்சன் சிங் பஞ்சாயத்து ராஜ் மற்றும் கால்நடை பராமரிப்பு துறைகளையும், சிராக் பாஸ்வான் உணவு பதப்படுத்தும் தொழில் துறை அமைச்சராகவும் உள்ளார்.
பாஜக கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி தலைவர் தலைவர் ஜெயந்த் சவுத்ரி, திறன், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான அமைச்சரவைக் குழுவில் சிறப்பு அழைப்பாளராகி உள்ளார். ஜெயந்த் சவுத்ரி திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சராக உள்ளார்.
பிற அமைச்சரவை குழுக்களில் உள்ளவர்களின் விவரங்களை பார்ப்போம். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு விஷயங்களை தவிர அனைத்து அமைச்சரவைக் குழுவிலும் இருக்கிறார். மத்திய விவசாய துறை அமைச்சராக உள்ள மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் இடம்பெற்றுள்ளார். நிர்மலா சீதாராமனுக்குப் பிறகு அமைச்சரவையில் முக்கியமான பெண் அமைச்சராக கருதப்படும் அன்னபூர்ணா தேவி, அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் உறுப்பினராக உள்ளார். அன்னபூர்ணா தேவி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ளார்.

ஒட்டுமொத்தமாக எண்ணிக்கையின் அடிப்படையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் மற்றும் நிதிஷ் குமாரின் ஜேடியூ ஆகியவை பாஜகவின் மிக முக்கியமான கூட்டாளிகளாக உள்ளன, ஏனெனில் அவர்களுக்கு முறையே 16 மற்றும் 12 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருக்க காரணமாக உள்ளார்கள். இந்தியா கூட்டணி 234 இடங்களில் வென்றுள்ள நிலையில், பாஜக வெறும் 240 இடங்களில் தான் வென்றுள்ளது. இதனால் கூட்டணி பலத்துடன் பாஜக இந்த முறை ஆட்சியமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
மேற்காசிய போர் பதற்றம்.. அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் மோடி இன்று ஆலோசனை! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications