Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"294 கிமீ" வேகம்.. மறுநொடி கொடூரம்! யமுனா எக்ஸ்பிரஸ்வே விபத்தில் பிரபல யூடியூபர் பலி! என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் சென்ற யூடியூபர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இது குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பைக் ஸ்டண்ட் என்பது வேறு.. நம்ம ஊரில் விதிகளை மீறி சாலைகளில் அதிவேகமாகச் செல்வது வேறு என்பது நம்ம ஊரில் பலருக்கும் தெரிவதில்லை.. பைக் ஸ்டண்ட் முறையான பாதுகாப்பு உபகரணங்களுடன் தனி ஒரு இடத்தில் செய்யப்படுவது.

 Police says YouTuber Agastay Chauhan Was going 294 Kmph at the time of crash in Yamuna Expressway

ஆனால், இங்கே பலரும் பொது சாலைகளில் சாலை விதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு மின்னல் வேகத்தில் பைக்கை இயக்குவதே ஸ்டன்ட் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கோர விபத்து: நம்ம ஊரில் இருக்கும் சில யூடியூபர்களும் கூட இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படிதான் கடந்த வாரம் யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் யூடியூபர் ஒருவர் மின்னல் வேகத்தில் தனது பைக்கை இயக்கியிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நடந்த கோர விபத்தில் யூடியூப் பிரபலம் அகஸ்தய் சவுகான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனிடையே இந்த விபத்து குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது விபத்து நடந்த சமயத்தில் அகஸ்தய் சவுகான் மணிக்கு 294 கிமீ வேகத்தில் தனது சூப்பர் பைக்கை இயக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். யூடியூபில் பிரபலமாக இருந்த அகஸ்தய், அதில் 1.2 மில்லியன் பாலோயர்ஸ்களை கொண்டிருந்தார்.

இவர் கடந்த வாரம் புதன்கிழமை ஆக்ராவில் இருந்து டெல்லிக்கு யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் வந்து கொண்டிருந்தபோது, ​​அங்கே இருந்த டிவைடரில் பைக் கட்டுப்பாட்டை இழந்தது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

எங்கே நடந்தது: விபத்து ஏற்பட்ட சமயத்தில் அவர் கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்10ஆர் - 1,000சிசி சூப்பர் பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தார். மேலும், அப்போது அவர் தனது சேனலுக்கு வீடியோ ஷூட் செய்யவும் ரெடியாகிக் கொண்டிருந்தார். அலிகாரில் உள்ள தப்பல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 47 மைல் பாயிண்டில் இந்த விபத்து நடந்துள்ளது.

 Police says YouTuber Agastay Chauhan Was going 294 Kmph at the time of crash in Yamuna Expressway

விபத்து குறித்துப் பேசிய மூத்த போலீஸ் சூப்பிரண்டு கலாநிதி நைதானி, அகஸ்தய் தனது அதிவேக பைக் ரைட்டை ரேக்காட் செய்ய பயன்படுத்திய கேமராவை மீட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இது குறித்து போலீசார் மேலும் கூறுகையில், "மே 3 அன்று யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த சாலை விபத்தில் ஒரு இளைஞன் உயிரிழந்ததாகத் தகவல் கிடைத்தது. எங்கள் விசாரணையில் உயிரிழந்த நபர் அகஸ்தய் என்ற டேராடூனை சேர்ந்த யூடியூபர் என்பது தெரியவந்தது. அவர் ஏற்கனவே ஒரு முறை இந்த சாலையில் அவரது பைக்கில் 300 கிமீ வேகம் சென்று விதிமீறலில் ஈடுபட்டிருந்தார்.

294 கிமீ வேகம்: அவரது வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி டிரெண்டிங் ஆகும். இப்போது அவர் பைக் பயணத்தின் போது அணிந்திருந்த கேமராவை மீட்டு ஆய்வு செய்தோம். அதில் விபத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவர் 294 கிமீ வேகத்தில் சென்றது தெரிய வந்தது. அப்போது தான் விபத்து நடந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்

பைக் ஓட்டுபவர்கள், குறிப்பாக இளைஞர்கள், சாலை பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். உங்களுக்கு எதிரே பைக்கில் வருவோருக்கு குடும்பம் குழந்தைகள் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்" என்றார்.

இந்த விபத்தால் அகஸ்தய் அணிந்திருந்த ஹெல்மெட் சுக்குநூறாக உடைந்தது. யூடியூபருக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்படவே இதன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

அகஸ்தே, 'ப்ரோ ரைடர் 1000' என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்தார். அவர் சேனலில் போட்ட கடைசி வீடியோவில், தான் டெல்லிக்குச் செல்வதாகக் கூறியிருந்தார். மேலும், அவர், "அந்த ரோட்டில் பைக் எவ்வளவு வேகமாகச் செல்ல முடியும் என்பதைப் பார்க்கப் போகிறேன்.. 300 கிமீ செல்லும் என்பது எனக்குத் தெரியும். அதைத் தாண்டி எவ்வளவு வேகம் செல்ல முடியும் என்பதைப் பார்க்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

பைக் வகை: இவர் உயிரிழந்த போது ஓட்டிச் சென்றது Kawasaki Ninja ZX10R பைக் ஆகும். இது மணிக்கு சுமார் 300 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது. இந்த சூப்பர் பைக் இந்தியாவில் ₹ 16 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது, இது நான்கு எஞ்சினுடன் வருகிறது. முழுமையாக எரிபொருள் நிரப்பப்பட்டால் இதை எடை 207 கிலோவாக இருக்கும்.

இவை 125-150cc பைக்குகளை விட சுமார் 15 மடங்கு வலிமையானது. இந்த பைக் மின்னல் வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது. இது 0-100 கிமீ வேகத்தை 3 வினாடிகளுக்குள் எட்டும். அதேபோல 0-200 கிமீ முதல் வரையிலான வேகத்தை வெறும் 10 வினாடிகளில் எட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+