முப்படைகள் ஒன்றாக களமிறங்க.. தரமாக நடத்தப்பட்ட சம்பவம்! அது என்ன precision strike? பாகிஸ்தான் ஷாக்
டெல்லி: பாகிஸ்தானுக்கு எதிரான இன்று நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் இந்தியா முப்படைகளையும் பயன்படுத்தியதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளின் துல்லியத் தாக்குதல் ஆயுத அமைப்புகள் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாக இந்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
தரைப்படை
தாக்குதல்கள் இந்திய மண்ணிலிருந்து மட்டுமே நடத்தப்பட்டன என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் இந்திய மண்ணில் இருந்து ஏவுகணைகள் ஏவப்ப்பட்டு உள்ளன. அதேபோல் பாகிஸ்தான் உள்ளே தாக்குதல்களை நடத்த இந்தியா சுசைட் ஏவுகணைகள் எனப்படும் "Suicide Drones" ஆயுதங்களை பயன்படுத்தி உள்ளன. இதை loitering munitions என்பார்கள். அதாவது இங்கும் அங்கும் மாறி மாறி மிதந்து சென்று அதன்பின்னர் தாக்கும் ஏவுகணைகள்.
கடற்படை
இந்தியாவில் Nagastra-1 எனப்படும் "Suicide Drones" உள்ளது. இதைத்தான் இன்று தாக்குதலில் பயன்படுத்தி உள்ளனர். இது சிறிய அளவில் இருந்தாலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இதைத்தான் பாகிஸ்தான் உள்ளே இந்தியா பயன்படுத்தி உள்ளது. இதை இந்தியாவின் கடற் பகுதிகளில் இருந்து கடற்படை சார்பாக தாக்குதலுக்கு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

விமானப்படை
பாகிஸ்தான் உள்ளே இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய போது.. இந்திய போர் விமானங்கள் எல்லையில் அரணாக பறந்து கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய ஏவுகணைகள் உள்ளே சென்ற போது பாகிஸ்தான் உடனே பதிலடி தரும். தரைவழி பதிலடி தந்தால் ராணுவம் மறுபதிலடி தரும். அதுவே ஏவுகணை அட்டாக் செய்தால் எல்லையில் உள்ள ஏவுகணை தடுப்பு அமைப்புகள் பதிலடி தரும்.
ஆனால் போர் விமானங்கள் உள்ளே வந்தால் அதனுடன் சண்டை போட போர் விமானங்கள் களமிறக்கப்பட வேண்டும். இதன் காரணமாகவே பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லையில் இந்திய விமானப்படை பெரிய அளவிலான இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது . அதாவது பாகிஸ்தான் உள்ளே இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய போது.. இந்திய போர் விமானங்கள் எல்லையில் அரணாக பறந்து கொண்டே எல்லையை காத்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான இன்று நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் இந்தியா முப்படைகளையும் பயன்படுத்தியதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. Precision strike என்று இதை அழைப்பார்கள். அதாவது அதாவது தீவிரவாத கேம்ப் மற்றும் ராணுவ கேம்ப் ஆகியவை மற்றும் குறிக்கப்படும். இப்படி குறிக்கப்பட்ட மையங்கள் அதன்பின் டிரோன் மூலம் கண்காணிக்கப்படும். அவை சரியான இடங்களா என்று உறுதி செய்யப்படும். அதன்பின்பே தாக்குவார்கள். அப்படிதான் இந்த தாக்குதல் நடந்து உள்ளது .
பாகிஸ்தான் மீது தாக்குதல்
பாதுகாப்பு துறையால் ஆபரேஷன் சிந்தூர் என்று இந்த தாக்குதலுக்கு பெயரிடப்பட்டு உள்ளது. இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தளங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடித்தியது இந்திய ராணுவம்.
அங்கு தீவிரவாத முகாமக்கள் மட்டும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற குறியீட்டுப் பெயரில் இரவு நேர துல்லியத் தாக்குதல்களில் மொத்தம் ஒன்பது தளங்கள் ரேடாரில் துல்லியமாக குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டன.
இந்தியாவிற்கு உள்ளே இருந்தே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவில் இருந்தே ஏவுகணைகள் மூலம் 9 இடங்கள் தாக்கப்பட்டு உள்ளன. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். இதில் பாகிஸ்தான் ராணுவ பகுதிகள் எதுவும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட வில்லை. இந்த தாக்குதல் மூலம் 12 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications