ஜனாதிபதி தேர்தல்: திரெளபதி முர்முக்கு காங். கூட்டணி கட்சி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரவு
டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு காங்கிரஸ் கூட்டணி கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரவு தெரிவித்துள்ளது.
நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க ஜூலை 18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜூலை 21-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பாஜக கூட்டணி சார்பில் திரெளபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 10,86,431 வாக்குகள் உள்ளன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள், மாநில கட்சிகள் ஆதரவுடன் மொத்தம் 6.67 லட்சம் வாக்குகள் ஆதரவை திரெளபதி முர்மு பெற்றுள்ளார்.
ஒடிஷாவை சேர்ந்த பழங்குடி இனத்தவர் என்பதால் அம்மாநில ஆளும் பிஜூ ஜனதா தளமும் திரெளபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. பிஜூ ஜனதா தளத்துக்கு மொத்தம் 32,000 வாக்குகள் உள்ளன. மொத்த வாக்குகளில் இது 2.9% சதவீதமாகும். பிஜூ ஜனதா தளத்துக்கு 114 எம்.எல்.ஏக்கள், 12 எம்.பிக்கள் உள்ளனர். திரெளபதி முர்முவுக்கு ஏற்கனவே 17,200 வாக்குகள் கொண்ட அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. 44,000 வாக்குகள் கொண்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், 6,500 வாக்குகள் கொண்ட தெலுங்குதேசமும் திரெளபதி முர்முவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கூட்டணி கட்சிகளில் ஒன்றான சிவசேனாவுக்கு 25,000 வாக்குகள் உள்ளன. இந்த கட்சியும் திரெளபதி முர்ம்வை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 5,600 வாக்குகள் இருக்கின்றன. மதச்சார்பற்ற ஜனதா தளமும் திரெளபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் திரெளபதி முர்முவை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது. பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் திரெளதி முர்முவுக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரவு தெரிவித்திருக்கிறது. இதனால் ஜனாதிபதி தேர்தலில் திரெளபதி முர்மு வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கிறது. நாடு விடுதலை அடைந்த பின்னர் முதல் முறையாக பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.
காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் சிவசேனாவைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் பாஜக கூட்டணி வேட்பாளரான திரெளபதி முர்முவை ஆதரிப்பது அக்கட்சியை கடும் அதிருப்தி அடைய வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications