பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி.. எல்.முருகன் வீட்டில் களைக்கட்டிய கொண்டாட்டம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இன்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கடந்த ஆண்டு தனது வீட்டில் பொங்கல் விழாவை சிறப்பாக நடத்தியிருந்தார். இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.

Prime Minister Modi will participate in the Pongal celebrations at Union Minister L. Murugans residence in Delhi

இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் இன்று டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள் என பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

விழாவில், தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து பங்கேற்றிருந்தார்.

பின்னர், 'தள்ளா விளையும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு' எனும் திருக்குறளுடன் உரையை தொடங்கிய பிரதமர், "2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க உறுதி பூண்டுள்ளோம்" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,

"விளைவித்த நெல்மணிகளை பொங்கலின் போது இறைவனுக்கு படைப்பது பாரம்பரியமானது. நமது ஒவ்வொரு பண்டிகைகளும் விவசாயிகளுடன் தொடர்புடையவை. தமிழ் பெண்கள் வீடுகளில் போடும் வண்ணக் கோலங்களில் பெரிய மகத்துவம் மறைந்துள்ளது. பல புள்ளிகள் இணைந்து கோலமாவது போல் பல தரப்பினர் இணைந்தால் நாடு அழகாகிறது.

பலதரப்பட்ட மக்களை இணைக்கும் பணியைத் தான் காசி தமிழ்ச்சங்கம் செய்கின்றது. சிறுதானியங்களை கொண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இளைஞர்கள் உருவாக்குகின்றனர்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+