டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீவிரவாத வைரசை பரப்பி வருகிறார்கள்.. அணிசேரா நாடுகள் உச்சிமாநாட்டில் பாகிஸ்தானுக்கு மோடி அட்டாக்

Google Oneindia Tamil News

டெல்லி: அணிசேரா இயக்க நாடுகள் உச்சிமாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானை மறைமுகமாக சாடினார்.

அணி சேரா இயக்கம் என்பது எந்தவொரு அதிகார மையத்தின் சார்பாகவோ எதிராகவோ அணிசேராத நாடுகளின் குழுமமாகும். இதில் 120 நாடுகள் உறுப்பினர்களாகவும் 17 நாடுகள் பார்வையாளர்களாகவும் உள்ளனர்.

Prime Minister Narendra Modi speech in Non-Aligned Movement

இந்த இயக்கம் 1961ம் ஆண்டு பெல்கிரேட்டில் உருவானது. பனிப்போரில் ஈடுபட்டிருந்த மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய அதிகார மையங்களுக்கு இடையே நடுநிலையில் வளரும் நாடுகள் செல்லவேண்டும் என்பதே இதன் மையக் கருத்தாக இருந்தது.

இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவிகேற்றப்பின், 2016-ம் வெனிசுலாவில் நடந்த அணிசேரா நாடுகளின் பட்டியலில் கலந்து கொள்ளாமல் முதல்முறையாக தவிர்த்தார். தொடர்ந்து, 18வது அணி சேரா நாடுகளின் மாநாடு கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்றபோதும் மோடி பங்கேற்கவில்லை. இந்த மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிராக உள்ளதாக காரணம் கூறி, மோடி இந்த மாநாடுகளை தவிர்த்தார்.

இந்த நிலையில், அணி சேரா நாடுகளின் மாநாடு அஜர்பைசான் அதிபர் இல்ஹாம் அலிவேவ் தலைமை இன்று வீடியோகான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது. இதில் முதல் முறையாக மோடி பங்கேற்றார். கொரோனா பாதிப்புக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளதால், மோடி, இன்த கூட்டத்தில் பங்கேற்றார்.

 ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்.. நெல்லையை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் உட்பட மூவர் வீர மரணம் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்.. நெல்லையை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் உட்பட மூவர் வீர மரணம்

மோடி பேசியதாவது: உலகம் COVID19 நோய்க்கு எதிராக போராடுகையில், சில சமூகங்கள் மற்றும் நாடுகளை பிளவுபடுத்த பயங்கரவாதம், போலி செய்திகள் போன்ற சில கொடிய வைரஸ்களை பரப்புவதில் சிலர் மும்முரமாக உள்ளனர் என்று அவர் பாகிஸ்தானை பெயர் குறிப்பிடாமல் சாடினார்.

மேலும் அவர் கூறுகையில், இப்படி சிலர் தீவிரவாதம் என்னும் வைரசை பரப்புவதில் முன்னிலையில் இருந்தாலும், இந்தியா மனிதாபிமானமாக நடந்து கொள்கிறது. இந்தியா 'உலகின் மருந்தகம்' என்று கருதப்படுகிறது. ஏனெனில் 120க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு, கொரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பியுள்ளோம்.

கொரோனா நோய் தடுப்பூசி கண்டுபிடிப்பதிலும், இந்தியா மும்முரமாக உள்ளது. இவ்வாறு மோடி தெரிவித்தார். பாகிஸ்தான் நாட்டிலிருந்து இயங்கும் தீவிரவாத அமைப்புகள், ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில், இந்திய வீரர்கள் வீரமரணமடைந்த நிலையில், மோடி இவ்வாறு பேசியுள்ளார்.

English summary
Prime Minister Narendra Modi says Non-Aligned Movement that even as the world fights COVID19, some people are busy spreading some other deadly viruses such as terrorism, fake news and doctored videos to divide communities and countries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X