ரஃபேல் போர் விமான டீலிங்கில் நடந்தது என்ன? உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பரபரப்பு அறிக்கை

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ரஃபேல் டீலிங்கில் நடந்தது என்ன? உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு அறிக்கை- வீடியோ

    டெல்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான, விளக்கத்தை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசின், இந்த அறிக்கை விவரங்கள் மனுதாரர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்து வருகிறது.

    ஒப்பந்தம் தொடர்பாக புகாரை பதிவு செய்வதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணை நடத்த வேண்டும் என்று சிபிஐ அமைப்புக்கு உத்தரவிடுவதோடு குறிப்பிட்ட கால இடைவெளியில் விசாரணை விவரங்களை உச்ச நீதிமன்றமே நேரடியாக கண்காணித்து பெற வேண்டும் என்றும், மனுவில், கோரிக்கை விடுக்கப்பட்டது.

    [150 சிபிஐ உயர் அதிகாரிகளுக்கு பல்வேறு பயிற்சி அளித்த சாமியார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்.. பின்னணி என்ன?]

    டெண்டர்

    டெண்டர்

    2007 ஆம் ஆண்டு ரஃபேல் போர் விமான கொள்முதல் தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் டெண்டர் கோரியது என்றும், டெண்டரில் மொத்தம் 126 போர்விமானங்கள் தேவைப்படுகிறது என்றும் அதில் 18 விமானங்கள் தயாரான நிலையிலும், எஞ்சிய 108 விமானங்கள் இந்தியாவில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் என்றும், நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

    புதிய ஒப்பந்தம்

    புதிய ஒப்பந்தம்

    ஆனால் இப்போதைய பிரதமரும், பிரான்ஸ் நாட்டின் அதிபரும் புதிதாக ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கி உள்ளனர். இதன்படி 126 ரஃபேல் போர் விமானங்களில் 36 விமானங்களை பறக்க தயாரான நிலையில் கொள்முதல் செய்வது என்று கூறப்பட்டுள்ளது. இதன்பிறகு மற்றொரு ஒப்பந்தத்தின்படி மொத்த ஒப்பந்தத்தில் 50 விழுக்காடு அளவுக்கு ஆப்செட் கான்ட்ராக்ட் என்ற வகையில், இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    அனில் அம்பானி

    அனில் அம்பானி

    ஆனால் அதிகாரப்பூர்வமற்ற வகையில் பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனம் இந்தியாவில் உள்ள அனில் அம்பானி நிறுவனத்திடம்தான் இந்த பணியை ஒப்படைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31ம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், யு.யு.லலித், கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு, ரஃபேல் ஒப்பந்தத்திற்கான நடைமுறை மற்றும் விலை விவரத்தை சீலிட்ட கவரில் வைத்து சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. நாட்டு பாதுகாப்பு தொடர்பாக, ரகசியமாக போடப்பட்ட ஒப்பந்தம் என்பதால் வெளிப்படையாக அதுகுறித்து தெரிவிக்க முடியாது என்ற மத்திய அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.

    அறிக்கை தாக்கல்

    அறிக்கை தாக்கல்

    சுப்ரீம் கோர்ட் உத்தரவையேற்று, மத்திய அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. '36 ரஃபேல் போர் விமான கொள்முதலுக்கான முடிவின் நடைமுறை விவரங்கள்' என்ற தலைப்பில், இந்த அறிக்கை, உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
    இந்த ஆவணத்தில், பாதுகாப்பு துறையின் கொள்முதல் நடைமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதல் பெறப்பட்டே, ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய குழு சுமார் ஒரு வருடங்களாக பிரான்ஸ் நாட்டு அரசுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி, மத்திய பாதுகாப்புத் துறைக்கான, அமைச்சரவை கமிட்டியின் ஒப்புதலுடன் இரு நாடுகளுக்கு இடையே விமான கொள்முதலுக்கான கையெழுத்து போடப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    அம்பானி குழுமம்

    அம்பானி குழுமம்

    அனில் அம்பானியின், ரிலையன்ஸ் குடும்பத்திற்கு விமான உபகரண ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக எழுந்த சர்ச்சை குறித்தும், அதில், பதில் அளிக்கப்பட்டுள்ளது. அந்த பதிலில், எந்த ஒரு இந்திய தனியார் நிறுவனமும், இந்த ஒப்பந்தத்தின் பங்குதாரர் என்று குறிப்பிடப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+