எதிர்க்கட்சி தலைவராகும் ராகுல் காந்தி? தொடங்கியது காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்
டெல்லி: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தான் இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கி உள்ளது. அதன்பிறகு புதிய எம்பிக்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. மத்தியில் ஆட்சியமைக்க 272 எம்பிக்களின் ஆதரவு வேண்டும் என்ற நிலையில் பாஜக 240 இடங்களில் மட்டுமே வென்றது. தனி மெஜாரிட்டி இல்லாத நிலையில் பாஜக தனிப்பெரும் கட்சியாக மாறி உள்ளது.

இதனால் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம் உள்பட பிற கூட்டணி கட்சிகளின் 52 எம்பிக்களின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளது. நாளை இரவு 7.30 மணிக்கு 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடந்த 2019ம் ஆண்டை ஒப்பிடும்போது அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2019ல் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை 99 இடங்களை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. இதன்மூலம் லோக்சபாவில் அதிக இடங்களை பிடித்த கட்சிகளின் பட்டியலில் பாஜகவுக்கு (240 எம்பிக்கள்) அடுத்த இடத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணிக்கு 234 எம்பிக்கள் உள்ளன. இதனால் கடந்த 2014, 2019 ஆண்டுகளை போல் அல்லாமல் லோக்சபாவில் பாஜகவுக்கு எதிராக வலுவாக எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்க உள்ளது. இத்தகைய சூழலில் தான் இன்று காங்கிரஸ் கட்சி அடுத்தக்கட்ட முடிவுகள் குறித்து எடுக்க அடுத்தடுத்து கூட்டம் நடத்த உள்ளது.
அதன்படி இன்று ஒரே நாளில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் மற்றும் லோக்சபாவுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள், ராஜ்யசபா எம்பிக்களின் ஆலோசனை கூட்டம் என்பது நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து முதற்கட்டமாக இன்று காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள அசோகா நட்சத்திர ஹோட்டலில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை வகிக்க சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் லோக்சபா தேர்தல் செயல்பாடு, கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வு பற்றி விவாதிக்கப்பட உள்ளது. அதோடு கடந்த முறை எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற காங்கிரஸால் முடியவில்லை. ஆனால் இந்த முறை எதிர்க்கட்சி வரிசையில் அமர காங்கிரஸ் கட்சிக்கு போதுமான அளவுக்கு எம்பிக்கள் உள்ளன. இதனால் காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சி தலைரவாக ராகுல் காந்தியை நியமனம் செய்வது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.
அதன்பிறகு மதியம் காங்கிரஸ் தலைவர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளனர். இதையடுத்து மாலை 5.30 மணிக்க புதிதாக லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள், ராஜ்யசபா எம்பிக்களின் ஆலோசனை கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில்நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக ராகுல் காந்தி லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
அதைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு அசோகா ஹோட்டலில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி குழு உறுப்பினர்கள் காங்கிரஸ் எம்பிக்கள் மற்றும் மூத்த தலைவர்களுக்கு விருந்து அளிக்கப்பட உள்ளது.
-
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
மதுரை வடக்கு.. பிடிவாதம் காட்டிய மாணிக்கம் தாகூர்.. கண்டுகொள்ளாத திமுக! விருதுநகர் தொகுதியும் போச்சா -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட் -
காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா? -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications