டிஸ்லைக்கையும் கமென்ட்டையும் முடக்கலாம்.. ஆனால் மக்கள் குரலை முடக்கவே முடியாது.. ராகுல் பாய்ச்சல்
டெல்லி: டிஸ்லைக்கையும் கமென்ட்டையும் வேண்டுமானால் பாஜக முடக்கிவிடலாம். ஆனால் மக்களின் குரலை பாஜகவால் ஒன்றும் செய்ய முடியாது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். எனினும் அவர் பாஜகவின் பெயரை குறிப்பிடாவிட்டாலும் அவர் யாரை குறிப்பிடுகிறார் என்பது நன்றாகவே தெரிகிறது.
பிரதமர் நரேந்திர மோடி மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமையின் போது மன் கீ பாத் எனும் ரேடியோ நிகழ்ச்சியில் பேசுவது வழக்கம்.

எதிர்க்கட்சிகள்
அவ்வாறு அந்த நிகழ்ச்சியில் நாட்டின் பிரச்சினை, எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி, எதிரி நாடுகளுக்கு பதிலடி என்பதை கொடுப்பது வழக்கம். இந்த நிலையில் கொரோனாவுக்கு மத்தியில் ஜேஇஇ, நீட் தேர்வுகளை நடத்தக் கூடாது என மாணவர்களும் பெற்றோரும், எதிர்க்கட்சியினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

பாஜக
எனினும் இந்த கோரிக்கையை செவிமடுக்காத பாஜக ஜேஇஇ, நீட் தேர்வுகளுக்கான தேதியை அறிவித்தது. ஜேஇஇ கடந்த 1ஆம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. நீட் தேர்வோ செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. கொரோனா தொற்று, வெள்ள பாதிப்பு ஆகியவற்றால் தேர்வை ஒத்திவைக்க கோரிக்கைகள் எழுந்தன.

சிப்பிப்பாறை
இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகளும் கையில் எடுத்தன. இந்த நிலையில் கடந்த மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இதுகுறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரோ தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, சிப்பிப்பாறை நாய் உள்ளிட்டவை குறித்து பேசினார்.

பிரதமர் மோடி
இதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் இந்த மன் கீ பாத் வீடியோவுக்கு லட்சக்கணக்கானோர் டிஸ்லைக் என கொடுத்ததாகவும் சிலர் ஜேஇஇ, நீட் தேர்வுகளை நடத்தும் அரசின் முடிவுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த வீடியோவுக்கான கமென்ட்டுகளையும், டிஸ்லைக் ஆப்ஷனையும் பாஜக நீக்கியதாக கூறப்படுகிறது.

ராகுல் காந்தி
இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் டிஸ்லைக்கையும் கமென்ட்டையும் வேண்டுமானால் பாஜக முடக்கிவிடலாம். ஆனால் மக்களின் குரலை பாஜகவால் ஒன்றும் செய்ய முடியாது என்றார் ராகுல் காந்தி. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். எனினும் அவர் பாஜகவின் பெயரை குறிப்பிடாவிட்டாலும் அவர் யாரை குறிப்பிடுகிறார் என்பது நன்றாகவே தெரிகிறது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications