டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு சாயம் பூச விரும்பவில்லை.. ராகுல் காந்தி பேட்டி

Google Oneindia Tamil News

டெல்லி: மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு சாயம் பூச விரும்பவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேட்டி அளித்தார்.

நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் பாஜக 300- க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

Rahul Gandhi says that i dont want to give any colour for people judgement

காங்கிரஸ் கட்சி 50 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதையடுத்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் மக்கள் தான் முடிவு எடுப்பார்கள் என்றேன். அதுதான் நடந்துள்ளது. மக்கள் மோடியை பிரதமராக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன். நாட்டு மக்கள் தங்கள் முடிவை தெளிவாக கூறிவிட்டார்கள்.

இந்தியாவில் எங்கும் இப்படி நடக்கவில்லை.. புதிய சாதனை படைத்த கோவை வாக்காளர்கள்.. வெல்டன்!இந்தியாவில் எங்கும் இப்படி நடக்கவில்லை.. புதிய சாதனை படைத்த கோவை வாக்காளர்கள்.. வெல்டன்!

தேர்தலில் வெற்றி பெற்ற மோடிக்கும் பாஜகவுக்கும் வாழ்த்துகள். குறைகள் பற்றி ஏதும் பேச விரும்பவில்லை. மோடி பிரதமராவதை மதிக்கிறேன். மக்கள் கொடுத்த தீர்பபுக்கு சாயம் பூச விரும்பவில்லை.

காங்கிரஸ் மீது இதுவரை நம்பிக்கை வைத்தவர்கள் அதை தொடர வேண்டும். அமேதி தொகுதியில் என்னை வீழ்த்திய ஸ்மிருதி இரானிக்கும் வாழ்த்துகள்.

என் மீது யார் அவதூறு பேசினாலும் நான் தொடர்ந்து அன்பை செலுத்துவேன். எது தவறாக போனது என்பது குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் இதுவல்ல. தோல்வியை கண்டு பயப்படாதீர்கள், தொடர்ந்து போராடுவோம் என்றார் ராகுல் காந்தி.

பத்து பேர் சேர்ந்து ஒருத்தனை எதிர்த்தா யாரு பலசாலி.. மோடிக்கு ரஜினி வாழ்த்து!! பத்து பேர் சேர்ந்து ஒருத்தனை எதிர்த்தா யாரு பலசாலி.. மோடிக்கு ரஜினி வாழ்த்து!!

English summary
Rahul Gandhi says that i dont want to give colour to people' judgement. I respect Modi as India's PM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X