டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.. பறிக்கப்பட்ட ராகுல் காந்தி வசிக்கும் பங்களா? காலி என அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, லோக்சபாவால், ஒதுக்கப்பட்ட பங்களா பறிக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2004 ஆம் ஆண்டு முதல் முறையாக லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று எம்பி ஆனார், ராகுல் காந்தி. உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்டார் அவர்.

அன்று முதல் டெல்லியில், துக்ளக் லேன் பகுதியில் உள்ள 12வது எண் கொண்ட பங்களா ராகுல்காந்திக்கு கொடுக்கப்பட்டது.

பீகாரில் சட்டென மாறிய அரசியல் வானிலை.. நிதிஷ்குமாருடன் கை கோர்க்க லாலு கட்சி ரெடி! பீகாரில் சட்டென மாறிய அரசியல் வானிலை.. நிதிஷ்குமாருடன் கை கோர்க்க லாலு கட்சி ரெடி!

2004 முதல் எம்.பி

2004 முதல் எம்.பி

2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்தது. பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்தது. அந்த முறை, காங்கிரஸ் கட்சியால் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியவில்லை. இருப்பினும் ராகுல் காந்தி எம்.பி. என்ற வகையில் அதே பங்களாவில் தான் வசித்து வந்தார்.
ஆனால் தற்போது லோக்சபா செயலகம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டு உள்ளது. அது, எம்பிக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடுகள் மற்றும் பங்களாக்கள் தொடர்பான அறிவிப்பு ஆகும்.

பங்களா காலி

பங்களா காலி

அந்த சுற்றறிக்கையில், ராகுல் காந்தி தற்போது வசித்து வரும் துக்ளக் லேன் 12வது எண் பங்களா காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காலியாக உள்ள பங்களாக்கள் வேறு எம்பிக்கள் அல்லது அமைச்சர்களுக்கு, ஒதுக்கப்படுவது வழக்கம்.

ஒரு வார்த்தையும் சொல்லவில்லை

ஒரு வார்த்தையும் சொல்லவில்லை

எனவே, இந்த பங்களாவும் வேறு யாரோ ஒரு அமைச்சருக்கோ அல்லது, எம்பிக்கோ, ஒதுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக, ராகுல் காந்தி அலுவலகத்திற்கு இதுவரை எந்த தகவலும் செல்லவில்லை என்று தெரிகிறது. எனவே, ராகுல் காந்தியிடம், சொல்லாமலேயே அவரது பங்களா காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பங்களாக்கள், பிளாட்டுகள்

பங்களாக்கள், பிளாட்டுகள்

ராகுல்காந்தி வசித்து வருவது எட்டாவது டைப் வகையைச் சேர்ந்த பங்களா. இது உச்சபட்ச வசதிகள் கொண்ட பங்களாவாகும். பங்களாக்கள், சிறு பிளாட்டுகள் இரட்டை பிளாட்டுகள், பல அடுக்கு கொண்ட பிளாட்டுகள் என பல்வேறு வகையான வீடுகள் எம்பிகளுக்கு வழங்கப் படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 159 பங்களாக்கள், 37 இரட்டை பிளாட்டுகள், 93 ஒற்றை பிளாட்டுகள், 96 பல மாடி பிளாட்டுகள் மற்றும் 32 ஒற்றை வழக்கமான விடுதிகள் எம்பிக்களுக்கு தயாராக உள்ளது. இதில் வயநாடு எம்பியான ராகுல் காந்திக்கு எது ஒதுக்கப்படுகிறதோ தெரியவில்லை.

English summary
A new Lok Sabha is in place and the new MPs are all set to take oath on June 17. However, the Lok Sabha secretariat has initiated the process to allot the houses for the new members.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X