Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காஷ்மீரில் ராஜ்நாத் சிங்.. கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 1999 ஆம் ஆண்டு கார்கில் போரில் கொல்லப்பட்ட வீரர்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார்.

ஜம்மு-காஷ்மீரின் டிராஸ் செக்டாரில் உள்ள நினைவுச் சின்னத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 20வது ஆண்டுகால 'ஆபரேஷன் விஜய்'வை நினைவுகூர்ந்தார் அவர்.

Rajnath pays tribute to soldiers killed in Kargil war, will inaugurate two bridges

கார்கிலுக்கு வருகை தந்துள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கதுவாவில் உள்ள உஜ் மற்றும் சம்பா மாவட்டத்தில் பசந்தரில் எல்லை சாலைகள் அமைப்பால் கட்டப்பட்ட இரண்டு பாலங்களையும் தேசத்திற்கு அர்ப்பணிப்பார்.

ராணுவத்தின் 'ஆபரேஷன் விஜய்' 1999 ல் பாகிஸ்தானின் ஊடுருவலுக்கு எதிரான குறுகிய கால போருக்கு இடப்பட்ட குறியீட்டு பெயராகும். பனிக்கட்டி நிறைந்த கார்கில், டோலோலிங் மற்றும் டைகர் ஹில் போன்ற மிக உயர்ந்த இடங்களிலும் இந்திய ராணுவம் தீரத்தோடு சண்டையிட்டு பாகிஸ்தான் படைகளை ஓட ஓட விரட்டிய நினைவு நாள் இதுவாகும்.

"கார்கில் போர் நினைவுச் சின்னத்தில் 'ஆபரேஷன் விஜய்'யின் தியாகிகளின் நினைவாக மாலை அணிவித்து ராஜ்நாத்சிங் காஷ்மீரில் இன்று தனது பயணத்தைத் தொடங்கினார், அதைத் தொடர்ந்து வீர மரணமடைந்தோருக்கு மரியாதை செலுத்தும் அடையாளமாக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

டிராஸில் உள்ள போர் நினைவு வளாகத்தில் அமைந்துள்ள 'வீர் பூமி' மற்றும் 'ஹட் ஆஃப் ரெமரன்ஸ்' ஆகியவற்றை பார்வையிட்டார்.

ராஜ்நாத் சிங்குடன் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் தலைமை அதிகாரி வடக்கு பிராந்தியம்- லெப்டினென்ட் ஜெனரல் ரன்பீர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+