தலைமைத் தேர்தல் ஆணையரை.. பதவி நீக்க கொண்டுவரப்பட்ட தீர்மானம் அதிரடியாக ரத்து!
டெல்லி: மத்திய அரசுக்கு ஆதரவாக, ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் என்று கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது பதவி நீக்க தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்திருந்தன. இந்நிலையில், இந்த தீர்மானம் தற்போது ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
இந்த தீர்மானத்தை ஆய்வு செய்த, மக்களை மற்றும் மாநிலங்களவை தலைவர்கள், போதிய ஆதாரம் இல்லை என்று கூறி தீர்மானத்தை ரத்து செய்திருக்கின்றனர்.

மத்திய அரசுக்குச் சாதகமாகச் செயல்படுவதாகவும், பாரபட்சமான அணுகுமுறையைக் கொண்டிருப்பதாகவும் கூறி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 63 மாநிலங்களவை எம்.பி.க்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவியிலிருந்து நீக்கக் கோரி கடந்த மாதம் 12ம் தேதி நோட்டீஸ் அளித்தனர். மொத்தம் 7 குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் அடுக்கியிருந்தனர்.
பதவியைப் பயன்படுத்தி பாரபட்சமாகச் செயல்படுதல். ஆளுங்கட்சிக்குச் சாதகமாக முடிவுகளை எடுப்பது. வாக்காளர் பட்டியல் முறைகேடு. பீகாரில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் (SIR) போது, ஏராளமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு.
தேர்தல் மோசடி விசாரணையைத் தடுத்தல். தேர்தல் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளைத் திட்டமிட்டுத் தடுத்தது. மற்றும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 324(5)-ன் படி, நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை அடிப்படையில் இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை ஆய்வு செய்த மாநிலங்களவைத் தலைவர், போதிய ஆதாரங்கள் அல்லது நடைமுறை காரணங்களைக் காட்டி அதனை நிராகரித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications