வெள்ளையனே வெளியேறு என்பதை போல.. அசுத்தமே வெளியேறு என கோஷமிடுவோம்.. மாணவர்கள் மத்தியில் மோடி பேச்சு
டெல்லி: தேசிய துப்புரவு மையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்து, பள்ளி மாணவ, மாணவிகளிடம் உரையாடினார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று, மகாத்மா காந்தி நினைவிடம் அமைந்துள்ள டெல்லி, ராஜ்காட்டில் தேசிய சுகாதார மையத்தை திறந்து வைத்தார்.
அப்போது தேசிய துப்புரவு மையத்தில் 'ஸ்வச் பாரத் மிஷன்' அடிப்படையிலான குறும்படத்தையும் பிரதமர் மோடி பார்த்தார். தேசிய துப்புரவு மையம் என்பது 'ஸ்வச் பாரத் மிஷனை' மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட மையமாகும்.

மினி இந்தியா
2017ம் ஆண்டு, இப்படி ஒரு மையத்தை துவங்க உள்ளதாக மோடி அறிவித்திருந்தார். தற்போது அது மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இதில், பல மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி, மாணவ மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுடன் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில்,
இங்கு நான் ஒரு மினி இந்தியாவை பார்த்துக்கொண்டிருக்கிறேன். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் மாணவர்களின் பங்களிப்பு சிறப்பானது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நீங்கள் அனைவரும் முகக் கவசத்தை அணிந்துகொண்டு சமூக தொலைதூர விதிமுறைகளைப் பின்பற்றுகிறீர்கள் என்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

வரலாற்று சிறப்பு
இன்று மிகவும் வரலாற்று நாள். இன்றைய தேதி, அதாவது ஆகஸ்ட் 8 நாட்டின் சுதந்திரத்திற்கு ஒரு பெரிய பங்களிப்பாகும். இந்த நாளில், 1942 இல், காந்தியின் தலைமையில் சுதந்திரத்திற்கான ஒரு பெரிய வெகுஜன இயக்கம் தொடங்கியது.

அசுத்தமே வெளியேறு
சுதந்திர போராட்ட காலத்தில், வெள்ளையனே வெளியேறு என்று கோஷமிட்டோம். அதேபோல அசுத்தமே வெளியேறு என்று இப்போது கோஷமிட தேவை எழுந்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக அனைவரும் இணைந்து போரிட வேண்டும். காற்று மாசுக்கு எதிராகவும், மாணவர்கள் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.

ஆகஸ்ட் புரட்சி
இந்தியாவிலிருந்து வெள்ளையர்களை எதிர்த்து நடைபெற்ற அறவழிப் போராட்டம் 1942ம் ஆண்டு தீவிரம் அடைந்தது. ஆகஸ்ட் புரட்சி என்று அழைக்கப்படும் இந்த இயக்கத்தின் முதற்கட்ட பணி, ஜூலை 1942ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் செயற்குழுவில் தொடங்கியது.

வெள்ளையனே வெளியேறு
பிறகு, ஆகஸ்ட் 8ம் தேதி பம்பாயில் (தற்போதைய மும்பை) இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை (quit india movement) நாடு முழுவதும் தீவிரப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் பேசிய மகாத்மா காந்தி, செய் அல்லது செத்து மடி என்ற கோஷத்தை முன்வைத்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார். இதன்பிறகு 5 வருடங்களில், அதாவது 1947ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம் தேதி, வெள்ளையர்கள், இந்த நாட்டை விட்டு வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications