Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஷ்யா எண்ணெய் கொள்முதல்.. மீண்டும் அத்துமீறிய டிரம்ப்.. ஒரே முடிவில் ஆட்டத்தை மாற்றிய இந்தியா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா - அமெரிக்கா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. வரி உயர்வு நடவடிக்கை தொடங்கி பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டுவதுவரை அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் கொள்முதல் செய்யாது என்று டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா செய்துள்ள சம்பவம் டிரம்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நட்பு நாடுகளாக இருந்த இந்தியா - அமெரிக்கா கடந்த சில மாதங்களாக எதிரி நாடுகளாக மாறிவிட்டன. டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்து அவர், இந்தியாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். விசா விவகாரத்தில் தொடங்கி வரி உயர்வு வரை பல விஷயங்களில் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் பணியை டிரம்ப் செய்து கொண்டிருக்கிறார்.

Donald Trump Oil

டிரம்பின் நடவடிக்கை

உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக ரஷ்யா நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தங்களின் பொருளாதாரத்தை சீரமைக்க அவர்கள் மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்தனர். இதை இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் வாங்கின. இதற்கு டிரம்ப் மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

டிரம்ப் ஒருபடி மேலே சென்று இந்தியாவில் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி உயர்வு விதித்து அறிவித்தார். இதனால் இந்தியாவில் உள்ள தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதேபோல சீனா உற்பத்தி பொருட்களுக்கான வரியும் 100 சதவீதமாக வரி உயர்த்தியுள்ளார் டிரம்ப்.

கச்சா எண்ணெய் கொள்முதல்

இந்தியா உள்ளிட்ட நாடுகள் கச்சா எண்ணெய்க்காக கொடுக்கும் பணத்தைத்தான் ரஷ்யா போருக்கு பயன்படுத்துகிறது என்று டிரம்ப் கூறி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தப் போகிறது என்று கூறியிருந்தார். இதற்கு அப்போதே இந்தியா மறுப்பு தெரிவித்துவிட்டது. வெளிப்படையாக மறுத்தும் டிரம்ப் மாறவில்லை.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இன்று டிரம்ப், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி சந்தித்தனர். அப்போது பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. டிரம்ப் பேசும்போது, இந்தியா இனி எப்போதும் ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்ய போவதில்லை. ஹங்கேரியில் ஒரே ஒரு பைப்லைன் தான் உள்ளது. அங்கும் பற்றாக்குறையில் உள்ளது. அதனால் ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது என்று உறுதியாக கூறினார்.

டிரம்புக்கு செக்

மீண்டும் மீண்டும் ஒரே கருத்தை சொல்வதன் மூலம் இந்தியா மீது நெருக்கடி கொடுக்க டிரம்ப் முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. அதனால் தான் மோடி - டிரம்ப் உரையாடியதாக தவறான தகவலை அமெரிக்கா பரப்பி வருவதாக தகவல் வெளியானது. ஏற்கனவே இந்தியாவில் ரஷ்யா இறக்குமதி செய்யும் எண்ணெய் அளவு 40 சதவீதமாக உள்ளது. இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

அக்டோபர் மாத பாதியில் இருந்து ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தினசரி 16 லட்சம் பீப்பாய் எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் நிலையில், அதை தினசரி 18 லட்சம் பீப்பாயாக அதிகரிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது டிரம்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+