புடவை அணிந்து வந்த பெண்ணை.. உள்ளே விட மறுத்த ரெஸ்டாரெண்ட்.. இறுதியில் நடந்தது என்ன?
டெல்லியில் சேலை அணிந்து வந்த பெண்ணை தடுத்து நிறுத்திய ஓட்டல் மூடப்படுகிறது
டெல்லி: புடவை அணிந்து வந்த பெண்ணை அனுமதிக்க மறுத்த ரெஸ்டாரன்ட் தற்போது மூடும் நிலைக்கு ஆளாகியுள்ளது.
டெல்லியில் ரெஸ்ட்டாரெண்ட்டில் கடந்த வாரம் பரபரப்பு சம்பவம் ஒன்று நடந்தது.. அந்த ஹோட்டலுக்கு பெண் ஒருவர் புடவை அணிந்து சென்றுள்ளார்..
ஆனால், அந்தப் பெண்ணை ஹோட்டல் ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை.. தன்னை உள்ளே அனுமதிக்க மறுப்பது ஏன்? என அந்த பெண் கேட்க, புடவை அணிந்தவர்களுக்கு அனுமதி கிடையாது எனத் தெரிவித்துள்ளனர்..

அதிர்ச்சி
அதாவது மார்டன் டிரஸ் அணிந்து வருபவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளனர். இதனால், ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைந்த அந்த பெண், அந்த உணவக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.... மேலும், அந்த ஊழியர்களிடம் வாதம் செய்யும் காட்சிகளையும் அவர் வீடியோவாக பதிவு செய்தார்.. இதையடுத்து அந்த ரெஸ்டாரண்ட்டுக்கு சோஷியல் மீடியாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது..

மறுப்பு
புடவை கட்டி சென்ற பெண்ணுக்கு ஆதராவாக saree என்னும் ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டிரெண்ட் செய்தனர்.
ஆனால், இந்த சம்பவத்துக்கு ஹோட்டல் நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருந்தது.. "குற்றச்சாட்டுகளை முன்வைத்த அந்த பெண், ஹோட்டலில் உணவு அருந்த முன்பதிவு ஏதும் செய்யவில்லை... முன்பதிவு செய்யாமல் வந்த அவரை கொஞ்ச நேரம் பொறுமையாக இருக்க வேண்டி கொண்டோம். அவர்களை எங்கே உட்காரவைப்பது என்பது தொடர்பாக நாங்கள் ஒரு ஆலோசனையில் ஈடுபட்டோம்.

மேனேஜர்
ஆனால் அந்த பெண்மணி அதுவரை காத்திருக்க விரும்பாமல், அவர்கள் உணவகத்திற்கு வந்து சண்டையில் ஈடுபட்டதோடு அல்லாமல் எங்கள் நிர்வாகத்தில் பணியாற்றும் நபர் ஒருவரை கைநீட்டி அறைந்துள்ளார்... அந்த நிலைமை மேலும் மோசமாக போய்விடக் கூடாது என்பதற்காகவே எங்கள் மேனேஜர் ஒருவர் ஆடை குறித்து சொல்லி அவர்களை அங்கிருந்து வெளியே போகுமாறு தெரிவித்தார்...

விவாதம்
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விவாதத்தின் 10 நொடி காட்சிகளை மட்டுமே அவர் பதிவிட்டிருக்கிறார்" என்று விளக்கம் ரெஸ்டாரண்ட் சார்பில் தந்திருந்தது. மேலும், அந்த நபர் எங்கள் ஊழியரை கை நீட்டி அறையும் காட்சியும், எப்போதும் புடவை அணிந்து வரும் விருந்தினர்களை திருப்பி அனுப்பியதில்லை என்பதற்கான ஆதாரங்களையும் இணைத்தே வெளியிடுகிறோம் என்றும் கூறி வீடியோக்களை வெளியிட்டுள்ளது அந்த உணவகம்...

சித்தரிப்பு
அதாவது அந்த பெண் வெளியிட்ட வீடியோ அனைத்துமே சித்தரிக்கப்பட்டவை என்று கூறியிருந்தது. இந்தநிலையில் சம்பந்தப்பட்ட ரெஸ்டாரண்ட் மீது பகீர் புகார் கிளம்பி உள்ளது.. அந்த ரெஸ்டாரண்ட்டை நடத்துவதற்கு சரியான உரிமம் பெறவில்லையாம்.. அதனால் ரெஸ்டாரண்டை மூடுமாறு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்... ஓனரும் ரெஸ்டாரன்டை மூடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்...

மூடல்
அந்த பகுதி சுகாதார இன்ஸ்பெக்டர் சுகாதார வர்த்தக உரிமம் இல்லாமலும், சுகாதாரமற்ற நிலையிலும் ரெஸ்டாரண்ட் இயங்கி வந்ததை கண்டு, அதை மூடுவதற்கு நோட்டீஸ் அனுப்பினார்.. இதற்கு பிறகு, பொது சுகாதார இன்ஸ்பெக்டர் மறுபடியும் நேரில் சென்று ஆய்வு செய்தபோது, அதே நிலையில் இயங்கி வந்ததால் நடவடிக்கை மேற்கொண்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications