Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண் பயிற்சி டாக்டர் கொலை.. ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும்! மாநிலங்களுக்கு உள்துறை போட்ட அதிரடி ஆர்டர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மேற்குவங்க மாநிலத்தில், பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செயப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், தற்போது மத்திய உள்துறை அமைசச்சகம் அனைத்து மாநிலத்திற்கும் உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது. அதில், போராட்டம் நடைபெற்று வரும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை அறிக்கை அளிக்கப்பட வேண்டும்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக 31 வயது நிரம்பிய பெண் பணியாற்றி வந்தார். இவர் மருத்துவ மேற்படிப்பை படித்து பயிற்சி டாக்டராக இருந்தார். இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவ படிப்பை படித்து வந்த மாணவி பயிற்சி டாக்டராக ஆர்ஜி கார் மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் பணியாற்றி வந்தார்.

Kolkata Amit Shah National

இவர் கடந்த 8 ஆம் தேதி இரவு பணியில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது, அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் அரை நிர்வாணமாக பெண் பயிற்சி டாக்டர் சடலமாக கிடந்தார். உடற்கூறாய்வில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மாணவியின் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டுள்ளது.

அந்தரங்க உறுப்புகள், முகம், உதடுகள், கழுத்து, வயிறு, விரல்கள் மற்றும் கணுக்கால் ஆகிய இடங்களில் காயங்கள் இருப்பதாக தெரியவந்தது. இந்த கொடூர சம்பவம் தொடர்பக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். தற்போது சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது. பயிற்சி பெண் டாக்டர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செயப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெண் டாக்டர் மரணத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டம் வலுத்துள்ளது. இந்திய மருத்துவ சங்கம் நேற்று நாடு முழுவதும் போராட்டம் நடத்தியது. இதனால் மருத்துவ பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனிடையே மத்திய உள்துறை அமைசச்சகம் அனைத்து மாநிலத்திற்கும் உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது. அதில், போராட்டம் நடைபெற்று வரும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை அறிக்கை அளிக்கப்பட வேண்டும்.

மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இமெயில் பேகஸ் உள்ளிட்டவை மூலமாக இந்த தகவல்களை அனுப்பி வைக்க வேண்டும். அதே வேளையில், பெண் பயிற்சி டாக்டர் மரணத்திற்கு நீதி கேட்டும் நடபெறும் போராட்டங்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் எனவும் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முக்கியமான விஷயங்கள் உடனுக்கு உடன் மத்திய உள்துறை அமைச்சகத்துடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக இந்த உத்தரவு போடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கிடையே பயிற்சி பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மருத்துவமனையின் முன்னாள் முதல்வருக்கு சிபிஐ மூன்றாவது முறையாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சம்பவம் நடைபெற்ற போது மருத்துவமனையின் முதல்வராக இருந்த கோஷ், எங்கு இருந்தார்.. சம்பவம் குறித்து அறிந்ததும் அவர் எடுத்த உடனடி நடவடிக்கை என்ன? குடும்பத்தினருக்கு எப்போது தகவல் கொடுத்தார் போன்ற கேள்விகள் கேட்கப்படலாம் என்று சிபிஐ வட்டாரங்கள் கூறுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+