கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள்!
டெல்லி: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் தீவிரம் காட்டுகிறார்கள். மறுபக்கம் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது. கரூர் வழக்கு தொடர்பாக டெல்லியில் செந்தில் பாலாஜி இன்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினார். அப்போது அவரிடம் 6 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
தவெக தலைவர் விஜய் கடந்த வருடம் செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரம் பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கரூர் கூட்ட நெரிசல்
விஜய்யிடம் ஏற்கனவே 2 முறை டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். நேற்று முன்தினம் விஜய்யிடம் மூன்றாவது முறையாக சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் விசாரணை நடத்தினார்கள். சுமார் 7 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கூட்டணிக்காக பாஜக நெருக்கடி கொடுப்பதாகவும் புகார் எழுந்தது. ஆனால் அதிமுக - பாஜகவுடன் கூட்டணி இல்லை என தவெக அறிவித்துவிட்டது.
செந்தில் பாலாஜியிடம் விசாரணை
கரூர் சம்பவத்தில் ஆரம்பம் முதலே தவெகவினர் திமுக மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டி வருகிறார்கள். கரூரில், பாட்டிலுக்கு 10 ரூபாய் என விஜய் பாடியபோது செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் செருப்பை வீசியதாக தவெகவினர் கூறினர். செந்தில் பாலாஜியின் நடவடிக்கைகளில் பல்வேறு புகார்களை முன் வைத்தனர்.
விஜய்யே நேரடியாக சிபிஐ அதிகாரிகளிடம் புகார் சொன்னார். அதனடிப்படையில் செந்தில் பாலாஜியிடம் மார்ச் 17 ஆம் தேதி (இன்று) விசாரணை நடத்துவதற்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி சிபிஐ அதிகாரிகள் செந்தில் பாலாஜியிடம் இன்று விசாரணை நடத்தினர். இதற்காக செந்தில் பாலாஜி நேற்று டெல்லி சென்ற நிலையில் இன்று காலையில் சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகினார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து 6 மணி நேர விசாரணை நடந்தது. இதையடுத்து அவர் மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications