டாலரை மட்டும்தான் நம்புவோம்.. திடீரென டோனை மாற்றிய சக்தி காந்த தாஸ்! BRICS முயற்சிக்கு முற்று புள்ளி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலக அளவில் அமெரிக்க டாலரின் ஆதிக்கம் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. இதற்கு கடிவாளம் போட பிரிக்ஸ் நாடுகள் சேர்ந்து புதிய ரூபாயை உருவாக்க முயன்று வருகின்றனர். ஆனால், இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் பேசியிருக்கிறார்.

டாலரின் ஆதிக்கம் குறித்து சொல்லவே தேவையில்லை. உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தங்கள் அந்நிய செலாவணி இருப்புகளின் ஒரு பகுதியாக அமெரிக்க ரூபாயான டாலரைத்தான் வைத்திருக்கின்றன. இது உலகளாவிய கையிருப்பில் சுமார் 60%ஆக இருக்கிறது. எனவேதான் டாலர் உலகப் பொருளாதாரத்தின் முக்கிய அம்சமாக இருக்கிறது. இன்னும் சுருக்கமாக சொல்வதெனில் தங்கம், கச்சா எண்ணெய் எப்படி அனைத்து நாடுகளுக்கும் நிலையான பொருளாக இருக்கிறதோ, அதேபோல டாலர் இருக்கிறது.

dollar usa brics

சர்வதேச அளவில் ஏதேனும் பொருட்களை வாங்க வேண்டும் எனில், அதற்காக டாலரே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. கடன்கூட டாலரில்தான் வாங்கப்படுகின்றன. உலக வங்கி, ஐஎம்எஃப் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடமிருந்து வாங்கும் எல்லா கடன்களும் டாலரில்தான் கொடுக்கப்படுகின்றன. எனவே, உலக சில அமெரிக்காவுடன் தொடர்பில் இல்லை என்றாலும் கூட பொருளாதார ரீதியாக அமெரிக்காவை சார்ந்திருக்கின்றன. ஆனால் அமெரிக்க டாலர் தற்போது ஆதிக்கம் செலுத்தும் இடத்தில் இருக்கிறது. மற்ற மூன்றாம் நாடுகளின் ரூபாயை, டாலர் பலவீனமாக ஆக்குகிறது.

எனவே, இதற்கு முடிவு கட்ட பிரிக்ஸ் எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீன மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கூட்டமைப்பு புதிய நாணயத்தை/ரூபாயை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் இதற்கான மாதிரி கூட வெளியாகியிருந்தது. இந்த முயற்சி வெற்றி பெற்றால் டாலரின் ஆதிக்கத்திற்கு நிச்சயம் கடிவாளம் போட முடியும். ஏனெனில் உலக வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகளின் பங்களிப்பு 30% வரை இருக்கிறது.

பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்குள் வர்த்தகம் செய்யும்பொது புதிய ரூபாயை பயன்படுத்துவதன் மூலம் டாலருக்கு நெருக்கடி ஏற்படும். இன்னும் சில நாடுகள் பிரிக்ஸில் இணைய இருக்கிறது. எனவே எப்படி பார்த்தாலும் பிரிக்ஸ் நாடுகளுக்கு லாபம்தான். தற்போது ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் இந்தியா கச்சா எண்ணெய்யை வாங்கி வருகிறது. அதுவும் இந்தியாவின் சொந்த நாணயமான ரூபாயில் வாங்கி வருகிறது. இது இந்தியாவுக்கு லாபகரமான விஷயம். இப்படி எல்லா நாடுகளுக்கும் பொதுவான பணம் என்று ஒன்று இருந்தால் நிச்சயம் அமெரிக்கா ஜர்க் ஆகும்.

ஆனால் இம்முயற்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இந்தியாவின் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் சில கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். அதாவது, “டாலருக்கு மாற்றாக எந்த நாணயத்தையும் சர்வதேச வர்த்தகத்துக்கு பயன்படுத்தும் திட்டம் இல்லை” என கூறியுள்ளார். இந்த கருத்து பிரிக்ஸ் நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+