Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடியுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்ற சரத் பவார்.. "இந்தியா" கூட்டணி கட்சி அப்செட்! என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் 'இந்தியா' கூட்டணியின் முக்கிய தலைவருமாக பார்க்கப்படும் சரத் பவார், பிரதமர் மோடியுடன் ஒரே நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024-ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறலாம் எனத் தெரிகிறது. தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட தொடங்கிவிட்டன. மத்தியில் ஆளும் பாஜகவை இந்த முறை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. இதற்காக காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், திமுக உள்பட 26 எதிர்க்கட்சிகள் ஒரணியில் திரண்டுள்ளன.

Sharad Pawar, one of the seniormost leaders of the opposition bloc, shared stage with PM Modi

எதிர்க்கட்சிகளின் தங்களின் கூட்டணிக்கு "இந்தியா" என பெயர் வைத்துள்ளது. பாட்னா மற்றும் பெங்களூரில் என இரண்டு முறை எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசித்துள்ளன. இந்த ஆலோசனையில் தேசிய அளவில் தேர்தலில் ஓரணியில் நின்று பாஜகவை எப்படி எதிர்கொள்வது, சீட் பகிர்வு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 'இந்தியா' கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெறுகிறது.

எதிர்கட்சிகளின் கூட்டணியை ஒருங்கிணைப்பதில் முக்கிய தலைவராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார் முக்கியமானவராக பார்க்கப்படுகிறார். இந்த நிலையில், இன்று புனேவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் சரத்பவார் பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மகராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று லோக்மன்ய திலக் சமாரக் மந்திர் அறக்கட்டளை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சரத்பவார் அழைக்கப்பட்டு இருந்தார். பிரதமர் மோடிக்கு லோக்மன்யா திலக் தேசிய விருது இந்த நிகழ்ச்சியில் அளிக்கப்பட்டது. மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வியூகம் வகுத்து வரும் நிலையில், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவராக பார்க்கப்படும் சரத் பவார், மோடி பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார் என்ற பரவலாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

ஆனால், சரத் பவார் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிரதமர் மோடி நிகழ்ச்சி மேடைக்கு வந்ததும் சரத் பவாரை நோக்கி சென்று அவருடன் பேசினர். இரு தலைவர்களும் மிகவும் சகஜமாக பேசிக்கொண்டனர். இது இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சிவசேனா (யுபிடி) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், சரத்பவார் தன் மீதான சந்தேகத்தை போக்க மோடி நிகழ்ச்சியை புறக்கணித்து இருக்கலாம் என்று கட்டுரை வெளியாகியிருந்தது. சம்னாவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

பிரதமர் மோடி தேசியவாத காங்கிரஸ் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறினார். மேலும் அந்த கட்சியை உடைத்து மகாராஷ்டிர அரசியலை களங்கப்படுத்தினார். இதற்கு பிறகும் சரத்பவார், மோடியை வரவேற்பதில் சிலருக்கு உடன்பாடு இல்லை. எனவே அந்த நிகழ்ச்சியை புறக்கணித்து தன் மீது சிலருக்கு உள்ள சந்தேகத்தை போக்க சரத்பவாருக்கு இது சரியான வாய்ப்பு" என்று கூறப்பட்டு இருந்தது. எனினும், சரத் பவார் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புனேவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோரும் கலந்து கொண்டனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அஜித் பவார் தனது ஆதரவாளர்களுடன் தனி அணியாக சென்றுள்ளதால் அக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. என்.சி.பி கட்சிக்கு இருவருமே உரிமை கொண்டாடி வரும் நிலையில் சரத் பவாரும் அஜித்பவாரும் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றதும் மகாராஷ்டிர அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+